Thalapathy 68: விஜய்க்கு ரெண்டு ஜோடி.. ஜெய்க்கு?.. இதோ தளபதி 68 புதிய அப்டேட்!

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் லியோ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வரும் அக்டோபர் 19ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தளபதி 68 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

லியோ படத்தின் ரிலீசை தொடர்ந்து தளபதி 68 படத்தின் பூஜை போடப்பட்டு சூட்டிங் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Actress Aparna Das Roped to play Jais pair in Thalapathy 68?

தளபதி 68 படத்தில் இணைந்த அபர்ணா தாஸ்?: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் சிறப்பான வெற்றியை தொடர்ந்து இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, தலக்கோணம் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில், மீண்டும் காஷ்மீரில் பேட்ச் வேலைகள் நடத்தப்பட்டன.

படம் வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீடு வரும் அக்டோபர் 5ம் தேதி நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு மலேசியா, சென்னை அல்லது மதுரையில் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியோ படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ள விஜய், தற்போது வெளிநாட்டில் சுற்றுலா கொண்டாட்டத்தில் உள்ளார்.

Actress Aparna Das Roped to play Jais pair in Thalapathy 68?

இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்கும் அவர், தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்த செய்தியை பகிர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடவே அவரது வழக்கமான குட்டிக்கதையும் இந்த நிகழ்ச்சியில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். இந்த இசை வெளியீட்டிற்காக தற்போது முதலே ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த விழா மிகவும் பிரம்மாண்டமான அளவில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் கமிட்டாகியுள்ளார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் லியோ படத்தின் ரிலீசுக்கு பின்பு பூஜையுடன் துவங்கவுள்ளது. இதற்கான முன் தயாரிப்புப் பணிகளில் வெங்கட் பிரபு ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது படத்தின் நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ள நிலையில், ஜோதிகா மற்றும் பிரியங்கா மோகன் என அவருக்கு இரண்டு நாயகிகள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தில் பிரபுதேவா, ஜெய் உள்ளிட்டவர்களும் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார் அபர்ணா தாஸ். அந்தப் படத்தின் சூட்டிங்கின்போது விஜய்யுடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவர் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X