நான் உன்ன விரும்பல... உன் மேல ஆசப்படல... அபர்ணா தாஸின் சுவாரசியமான காதல் கதை!

சென்னை: காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அபர்ணா தாஸ், தனது காதல் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில், தீபக் என்னுடைய வங்கி கணக்கில் இவ்வளவுதான் இருக்கிறது என்றும், நான் அடிக்கடி கோபப்படுவேன் என்றும், பட வாய்ப்பு இல்லை என்றாலும் நன்றாக பார்த்துக்கொள்வேன் என்று தனது காதலை சொன்னதாக கூறியுள்ளார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட அபர்ணா தாஸ், 1995ம் ஆண்டு பிறந்தார். கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், ஒரு நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றினார். சினிமா மீது இருந்த ஆர்வத்தால், படித்துக்கொண்டு இருக்கும் போதே, பத்திரிகைகளுக்கு மாடலாக மாறினார். அபர்ணாவின் டிக்டாக் வீடியோக்களில் ஒன்றைப் பார்த்த இயக்குநர், சத்யன் அந்திகாட்டின் இயக்கத்தில் நகைச்சுவை திரைப்படமான நான் பிரகாஷ் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்க வைத்தார். அந்த படம் இவருக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து, வினீத் ஸ்ரீனிவாசனுக்கு ஜோடியாக மனோகரம் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

actress aparna das deepak parambol

நடிகை அபர்ணா தாஸ்: இந்த திரைப்படத்தை தொடர்ந்து, நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகார். இந்த படத்தில், சின்ன ரோலில் நடித்திருந்தாலும் அவரை ஹீரோயின் ரேஞ்சுக்கு ரசிகர்கள் கொண்டாடினர். குறிப்பாக அப்படம் வெளியான போது, பூஜா ஹெக்டேவுக்கு பதில் இவரை ஹீரோயினாக நடிக்க வைத்திருக்கலாம் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து, கவின் நடித்த டாடா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். கணேஷ் கே. பாபு இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படமாக அமைந்தது.

எளிமையான திருமணம்: இந்நிலையில், நடிகை அபர்ணா மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்த தீபக் பரம்பொல் என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கேரள பாரம்பரிய முறைப்படி எளிமையான முறையில் நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அபர்ணா தாஸ் நடித்த 2வது படமான மனோகரம் படத்தில் நடித்த போது, தன்னுடன் இணைந்து நடித்த தீபக் பரம்பொல்லை காதலித்த நிலையில், பெற்றோரிடம் காதலை சொல்லி இருவரும் திருமணத்திற்கு சம்மதம் வாங்கி திருமணம் செய்து கொண்டார்.

முதல் சந்திப்பு: இந்நிலையில், அபர்ணா தாஸ் அளித்துள்ள பேட்டியில், நாங்கள் இருவருமே முதன்முதலாக வடக்கஞ்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் முதன்முதலாக சந்தித்து கொண்டோம். நான் சென்றேன் அங்கு வந்த தீபக் என்னை பார்த்து வணக்கம் சொன்னார். அவர் அப்படி சொன்னது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதோடு நான் இம்ப்ரஸ் ஆகிவிட்டேன். அதற்குப் பிறகு மனோகரம் என்ற படத்தின் படப்பிடிப்பில் சந்தித்துக்கொண்டோம்.

நாளடைவில் எங்களுடைய நட்பு காதலாக மாறியது, தீபக் தான் முதலில் காதலை என்னிடம் சொன்னார். அவர், என்னோட வங்கி கணக்கில் இவ்வளவுதான் இருக்கிறது, நான் அடிக்கடி கோபப்படுவேன், பட வாய்ப்பு இல்லை என்றால் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும், இருந்தாலும் உன்னை நன்றாக பார்த்துக்கொள்வேன் என்றார். அவர் சொன்ன விதம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது அபர்ணா தாஸ் தனது காதல் குறித்து பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X