ஆபாச கமென்ட்.. சைபர்கிரைம் போலீஸ் முன் நெட்டிசனை விளாசிய பிரபல நடிகை.. என்ன செய்தார் பாருங்க!
சென்னை: தனது பதிவுக்கு ஆபாசமாக கருத்துத் தெரிவித்தவரை, போலீஸ் ஸ்டேஷனில் வைத்து பிரபல நடிகை சரமாரியாக கேள்விகேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தமிழில் 'எதுவும் நடக்கும்' என்ற படத்தில் கார்த்திக் குமார் ஜோடியாக நடித்தவர், மலையாள நடிகை அபர்ணா நாயர்.
மலையாளத்தில் மல்லுசிங், ஹோட்டல் கலிபோர்னியா, ரன் பேபி ரன், கல்கி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

ஆபாச வர்ணிப்பு
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். அடிக்கடி பேஸ்புக்கில் தனது கருத்துகளையும் புகைப்படங்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருவது வழக்கம். சிலர் அவர் அழகை வர்ணிப்பதும் உண்டு. சிலர் எல்லை மீறி ஆபாசமாக வர்ணிக்க தொடங்கி விடுகின்றனர்.

ஆவேச சாடல்
இந்நிலையில், இவரது பக்கத்தில் ஒரு நெட்டிசன் ஆபாசமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதனால் அவேசமான அபர்ணா, அவரது பெயர்,பேஸ்புக் பக்கம் மற்றும் அவர் தெரிவித்திருந்த கருத்துக்களைக் குறிப்பிட்டு, ஆவேசமாகச் சாடியிருந்தார். 'இதுபோன்ற மோசமான கருத்துக்களை பதிவிட்டு, தங்களின் பாலியல் கற்பனைகளை தீர்த்துக் கொள்வதற்கான தளமல்ல, இது.

30 விநாடி சந்தோஷம்
நான் உங்கள் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யப் போகிறேன் என்றோ, உங்கள் கருத்துகளை புறக்கணிக்கப் போகிறேன் என்றோ நினைத்தால், அது தவறானது. இதுபோன்ற அருவருப்பான நடத்தைகளை சகித்துக்கொள்ள, நான் இங்கு இல்லை. நான் எனது பணியை விளம்பரப்படுத்த இங்கு இருக்கிறேன். உங்களுக்கு 30 விநாடி சந்தோஷத்தை கொடுப்பதற்கு அல்ல' இவ்வாறு காட்டமாகக் கூறி இருந்தார்.

வல்கர் கருத்து
பின்னர் சைபர்கிரைமில் புகார் செய்திருந்தார். இந்நிலையில் அந்த நபரை போலீசார் முன் நேரில் சந்தித்து விளாசியுள்ளார். இதுபற்றி அபர்ணா நாயர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: புகார் கொடுத்தபின், சைபர் கிரைமில் இருந்து என்னை அழைத்திருந்தார்கள். சென்றேன். வல்கர் கருத்துத் தெரிவித்த நபர் வருவதற்காக சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தேன்.

சரமாரியாகக் கேட்டேன்
வந்ததும் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் முன், ஏன் இப்படி வல்கராகக் கருத்துத் தெரிவித்தீர்கள் என்று சரமாரியாகக் கேட்டேன். வழக்கமாக சமூக வலைத் தளங்களில் அரசியல் கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம். அதைப் போலவே கருத்துத் தெரிவித்தேன் என்றார்.

குடும்பச் சூழல்
பின்னர் இனி எந்தப் பெண்ணுக்கும் அப்படி கருத்து பதிவிட மாட்டேன் என்று எழுதித்தரச் சொன்னேன். எழுதிக்கொடுத்தார். அவருடைய குடும்பச் சூழலை அறிந்து புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகை அபர்ணாவின் செயலுக்கு ரசிகர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். சிலர் அப்படி விட்டிருக்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











