'30 விநாடி சந்தோஷம் கொடுப்பதல்ல என் வேலை' வக்கிர நெட்டிசனை வசமாக விளாசித் தள்ளிய பிரபல ஹீரோயின்!
சென்னை: வக்கிரமாகப் பதிவிட்ட நெட்டிசனை சரமாரியாக விளாசித் தள்ளிய பிரபல ஹீரோயினை, ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Recommended Video
தமிழில் 'எதுவும் நடக்கும்' என்ற படத்தில் கார்த்திக்குமார் ஜோடியாக நடித்தவர், மலையாள நடிகை அபர்ணா நாயர்.
மலையாளத்தில் மல்லுசிங், ஹோட்டல் கலிபோர்னியா, ரன் பேபி ரன், கல்கி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

ஆபாச வர்ணிப்பு
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். அடிக்கடி பேஸ்புக்கில் தனது கருத்துகளையும் புகைப்படங்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதற்கு ரசிககர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருவது வழக்கம். சிலர் அவர் அழகை வர்ணிப்பதும் உண்டு. சிலர் எல்லை மீறி ஆபாசமாக வர்ணிக்க தொடங்கி விடுகின்றனர்.

ஆவேச சாடல்
இந்நிலையில், இவரது பக்கத்தில் ஒரு நெட்டிசன் ஆபாசமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதனால் அவேசமடைந்த அபர்ணா, அந்த நபரின் பெயரையும் பேஸ்புக் பக்கத்தையும் அவர் தெரிவித்திருந்த கருத்தையும் குறிப்பிட்டு, ஆவேசமாகச் சாடியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்தப் பக்கத்தை எனது நலம் விரும்பிகளுடன் உரையாடுவதற்காகப் பயன்படுத்துகிறேன்.

அருவருப்பான நடத்தை
இதுபோன்ற மோசமான கருத்துக்களை பதிவிட்டு, தங்களின் பாலியல் கற்பனைகளை தீர்த்துக் கொள்வதற்கான தளமல்ல, இது. நான் உங்கள் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யப் போகிறேன் என்றோ, உங்கள் கருத்துகளை புறக்கணிக்கப் போகிறேன் என்றோ நினைத்தால், அது தவறானது. இதுபோன்ற அருவருப்பான நடத்தைகளை சகித்துக்கொள்ள நான் இங்கு இல்லை.

சந்தோஷம் கொடுக்க
டியர்.... உங்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். ஒரு புகைப்படத்தில் அவரை இறுக்கமாக கட்டிப் பிடித்திருக்கிறீர்கள். அப்படியே நானும், யாரோ ஒருவரது மகள். இதுபோன்ற எதையாவது செய்யும் முன், அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நான் எனது பணியை விளம்பரப் படுத்த இங்கு இருக்கிறேன். உங்களுக்கு 30 விநாடி சந்தோஷத்தை கொடுப்பதற்கு அல்ல' இவ்வாறு காட்டமாகக் கூறியுள்ளார்.

வருத்தமாக இருக்கிறது
இதையடுத்து ரசிகர்கள் பலர், அபர்ணாவின் செயலைப் பாராட்டியுள்ளனர். ஒரு பெண், 'இவரை போன்ற வக்கிரம் பிடித்தவர்களை நானும் பார்த்திருக்கிறேன். இதை சொல்வது வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் சொல்கிறேன். இவரை போன்றவர்களை பெண்குழந்தைகளின் அருகிலேயே விடக் கூடாது என்று ஒருவர் கூறியுள்ளார்.

சரியான பதிலடி
'வயதான பிறகும் திருந்தாத ஜென்மங்கள். சைபர் கிரைமில் புகார் செய்திருக்க வேண்டும் என்று சிலர் கூறியுள்ளனர். 'சும்மா கடந்து செல்லாமல் சரியான பதிலடி கொடுத்திருக்கிறீர்கள், பெண்கள் இப்படித்தான் ரியாக்ட் செய்ய வேண்டும் அபர்ணா. இனி அவன் எங்கும் இப்படி செய்ய மாட்டான் என்று நினைக்கிறேன் என ஒருவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











