Aparna Das: அடிபொலி.. சூர்யாவைப் பார்த்ததும் தலை கால் புரியல.. டாடா நடிகையின் வீடியோவைப் பாருங்க!

கொச்சி: நடிகர் சூர்யாவின் நடிப்பில் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் கங்குவா. சூர்யா நடிப்பில் ஒரு படம் தியேட்டரில் வெளியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. படம் ரிலீஸ்க்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இதற்கான புரோமோசன் வேலைகளை கடந்த சில வாரங்களாகவே படக்குழு நடத்தி வருகின்றது. இந்நிலையில் படத்தின் புரோமோசன் நேற்று அதாவது நவம்பர் 5ஆம் தேதி கொச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை அபர்ணா தாஸ் சூர்யாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னர் துள்ளிக் குதிக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கங்குவா. இந்தப் படத்தில் திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். படம் இரண்டு வேறு காலகட்டங்களில் நடைபெறுவதைப்போல் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. படத்திற்கு தேவி ஸ்ரீ.பிரசாத் இசை அமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டுவிழா அண்மையில் சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல், இசை வெளியீட்டு விழா முடிந்த பின்னர், டிசம்பரில் படத்தின் வெற்றிவிழா இதே நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் ரசிகர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

kanguva suriya

படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. படம் ரிலீஸ் ஆன இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளதால் ரிலீஸ் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. படத்தின் புரோமோசன் பணிகளில் சூர்யாவும் இயக்குநர் சிவாவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை ஆகிய நகரங்களில் பெரும் புரோமோசன் பணிகள் நடைபெற்றது. ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் அன்ஸ்டாப்புள் நிகழ்ச்சியில் சூர்யா மற்றும் படக்குழு கலந்து கொண்டது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலய்யா இவர்களை பேட்டி எடுத்தார்.

kanguva suriya

சூர்யா ரசிகர்கள்: இந்நிலையில் கங்குவா படக்குழு கேரள மாநிலம் கொச்சியில் கங்குவா படத்தின் புரோமோசன் பணிகளில் ஈடுபட்டது. தமிழ்நாட்டினை அடுத்து சூர்யாவுக்கு ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். கங்குவா புரோமோசனைக் கேள்விப்பட்டதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சூர்யாவைக் காண கூடினார்கள்.

kanguva suriya

அபர்ணா தாஸ்: இந்த நிகழ்ச்சியில் டாடா பட நடிகையான அபர்ணா தாஸ் கலந்து கொண்டார். இவர் சூர்யாவுடன் தனியே செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு நீண்ட நேரம் காத்துக்கொண்டு இருந்தார். மேலும் இவருடன் இவரது கணவரும் நடிகருமான தீபக் பரம்பொல்லும் உடன் இருந்தார். சூர்யா கேக் வெட்ட தயாராகிக் கொண்டு இருந்தபோது மேடைக்குச் சென்ற அபர்ணா தாஸ், முதலில் தனது கணவரையும் சூர்யாவையும் புகைப்படம் எடுத்தார். அதன் பின்னர் சூர்யாவுடன் செல்ஃபியும் எடுத்துக் கொண்டார்.

அடிபொலி: இதுமட்டும் இல்லாமல், சூர்யாவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பின்னர் மேடையில் இருந்து கீழே வந்த அபர்ணா தாஸ் மிகவும் மகிழ்ச்சியாக சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை தனது நண்பர்களுக்கு காண்பித்தார். அப்போது அவர் தனது நண்பர்களிடத்தில் மலையாளத்தில், " கொள்ளல்லே" எனக் கூற அதற்கு அவரது நண்பர் அடிபொலி எனக் கூறுகின்றார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் அபர்ணா தாஸ் தனது இன்ஸ்டாகிராமில் சூர்யாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் கங்குவா படத்தின் புரோமோசனுடன் நவம்பர் 15ஆம் தேதி மலையாளத்தில் வெளியாகவுள்ள ஆனந்த் ஸ்ரீபாலா படத்தின் புரோமோசனும் நடைபெற்றுள்ளது. ஆனந்த் ஸ்ரீபாலா படத்தில் அபர்ணா தாஸ் நடித்துள்ளார்.

kanguva suriya

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X