எஸ்பிபிக்கு செய்ததை போல் செய்திருந்தால்.. வடிவேல் பாலாஜி இருந்திருப்பார்.. அறந்தாங்கி நிஷா உருக்கம்!

சென்னை எஸ்பிபிக்கு செய்ததை போல் அந்த ஒரு காரியத்தை செய்திருந்தால் நடிகர் வடிவேல் பாலாஜி இன்று நம்மோடு இருந்திருப்பார் என நடிகை அறந்தாங்கி நிஷா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் வடிவேல் பாலாஜியின் மறைவுக்கு சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவருடன் பணியாற்றிய பிரபலங்கள் அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கலக்கப்போவது யாரு உட்பட பல நிகழ்ச்சிகளில் வடிவேல் பாலாஜியுடன் பங்கேற்ற நடிகை அறந்தாங்கி நிஷா அவர் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

உடைந்து போய்விட்டேன்

உடைந்து போய்விட்டேன்

அவர் பேசியிருப்பதாவது, இந்த செய்தியை கேட்டதும் முதலில் நான் நம்பவில்லை. மா கா பாவின் மனைவி போன் செய்த பிறகுதான், நான் தாம்ப்சனை அழைத்தேன். அவர் வடிவேல் பாலாஜி அண்ணா இறந்த செய்தியை உறுதி செய்தார். அதைக் கேட்டு உடைந்து போய்விட்டேன்.

சொல்லியிருக்க வேண்டும்

சொல்லியிருக்க வேண்டும்

"அவருக்கு பக்கவாதம் ஏற்பட்ட பின்னர் 15 முதல் 20 நாட்கள் வரை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைப் பற்றி சமீபத்தில் தான் எனக்குத் தெரிய வந்தது. அவர் இதைப் பற்றி எங்களிடமோ அல்லது சேனலிடமோ சொல்லியிருக்க வேண்டும்.

எஸ்பிபிக்கு பாடல்..

எஸ்பிபிக்கு பாடல்..

அவர் யாராவது ஒருவரிடமாவது பேசியிருக்க வேண்டும். எஸ்பிபி சார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, அவரது அவரது வார்டில் அவர் பாடிய பாடல்கள் இசைக்கப்பட்டன. அதேபோல், வடிவேல் பாலாஜி அண்ணாவுக்கு நகைச்சுவை மிகவும் பிடிக்கும்.

Recommended Video

Hospital ல ஏமாத்திடாங்க • Aadhavan கண்கலங்கிய பேட்டி #RIPVadivelBalaji
அவரை காப்பாற்றியிருக்கலாம்

அவரை காப்பாற்றியிருக்கலாம்

அவருடைய நிலைமை எங்களுக்குத் தெரிந்திருந்தால், எங்களில் சிலர் அங்கு சென்று அவரை ஒரு நல்ல நகைச்சுவை மூடில் வைத்திருந்திருப்போம். அது அவரைக் காப்பாற்றியிருக்கும்." இவ்வாறு உருக்கமாக பேசியுள்ளார் நகைச்சுவை நடிகையான அறந்தாங்கி நிஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X