கொரோனா தடுப்பூசி போடுறதுக்கு இவ்வளவு ஓவர் ஆக்ட்டிங்..நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிய பிக் பாஸ் பிரபலம்
டெல்லி : டிவி நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான ஆர்த்தி சிங், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை மே 11 ம் தேதி போட்டுக் கொண்டார். இந்த ஃபோட்டோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அந்த ஃபோட்டோக்களில் பயந்த முகத்துடன் ஆர்த்தி உள்ளார். பயந்த முகத்துடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்த்தியின் ஃபோட்டோக்களை சமூக வலைதள பயனாளர்கள் பலர் ட்ரோல் செய்து வருகின்றனர். இதற்கு பலரும், கையில் டேட்டூ போட்டுக் கொள்ள பயப்படாதவர், தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்ள பயன்படுவது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்த ஃபோட்டோக்களுடன் ஆர்த்தி பதிவிட்டுள்ள கேப்ஷனில், ஊசி என்றால் பலம். ஆனாலும் போட்டுக் கொண்டேன். நாம் இதனை எதிர்த்து போரிட வேண்டும். முதல் டோஸை போட்டுக் கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஆர்த்தியின் முக பாவங்களை பலரும் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர்.
இது போன்ற செயல்களை பப்ளிசிட்டி பண்ண வேண்டாம் எனவும் பலர் கேட்டுள்ளனர். கையில் டேட்டூ போட்டுக் கொள்ள இப்படி பயப்படுவதில்லையே என்று சிலர் கேட்டுள்ளனர். ஆர்த்தி போன்ற சிலர் தடுப்பூசி போட பயப்படுவதை கண்டித்து, மற்றொரு டிவி நடிகையான ஆஷா நேஹி, ஓவர் ஆக்டிங்கை நிறுத்துங்க என்று கூட பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் ஜனவரி மாதம் துவங்கி தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. பிரபலங்கள் பலரும் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்வதுடன், அந்த ஃபோட்டோவை தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











