மூக்கில் இருந்து ரத்தம்.. தனியாக வசித்த பிரபல நடிகை சடலமாக மீட்பு.. திரையுலகம் ஷாக்!
மும்பை: தனியாக வீட்டில் வசித்து வந்த பிரபல நடிகை சடலமாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொரோனா காலகட்டத்தில் சினிமா துறையில் பலர் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட சினிமாதுறை, பல பிரபலங்களை இந்த வருடம் இழந்துள்ளது.

சடலமாக மீட்பு
முன்னணி கலைஞர்களான எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரிஷி கபூர், இர்பான் கான், சுஷாந்த் சிங் ராஜ்புத், சிரஞ்சீவி சார்ஜா, இயக்குனர் சச்சி உட்பட பலர் இந்த காலகட்டத்தில் மறைந்துள்ளனர். இந்நிலையில், பிரபல இந்தி நடிகை கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆர்யா பானர்ஜி
இந்தியில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையான டர்ட்டி பிக்சர், லவ், செக்ஸ் அண்ட் தோகா ஆகிய படங்களில் நடித்திருப்பவர் ஆர்யா பானர்ஜி. இவர் பிரபல சிதார் இசைக் கலைஞர் நிகில் பானர்ஜியின் மகள். ஆர்யாவின் சகோதரி சிங்கப்பூரில் வசிக்கிறார். இதனால், வீட்டில் தனியாக வந்து வந்தார் ஆர்யா.

வீட்டு வேலைக்காரர்
ஆர்யாவின் நிஜப்பெயர் தேவ்தத்தா பானர்ஜி. சினிமாவுக்காக தனது பெயரை ஆர்யா பானர்ஜி என பெயரை மாற்றி வைத்துள்ளார். இந்நிலையில், வேலைக்காரர் வழக்கம் போல வந்துள்ளார். கதவு உட்பக்கமாகத் தாளிடப்பட்டிருந்தது. பலமுறை காலிங் பெல் அடித்தும் பதில் இல்லாததால், அவர் அக்கம் பக்கத்து வீடுகளில் தெரிவித்துள்ளார்.

மூக்கில் ரத்தம்
அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சடலமாக கிடந்தார் ஆர்யா பானர்ஜி. அவர் மூக்கில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது. அவர் வாமிட்டும் எடுத்துள்ளார். சில காலி மது பாட்டில்களும் அங்கு கிடந்துள்ளன. இதையடுத்து உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Recommended Video

செல்ல நாயுடன்
போலீசார் கூறும்போது, 'அவர் வீட்டில் வேலை பார்ப்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கதவை உடைத்துப் பார்த்தோம். ஆர்யா, வீட்டில் தனியாக தனது செல்ல நாயுடன் வசித்து வந்துள்ளார். விசாரணை நடந்து வருகிறது என்றனர். இவர் மறைவு, இந்தி மற்றும் பெங்காலி திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











