கவர்ச்சி ரூட்டிக்கு மாறிய அஷிமா நர்வால்… டாப் ஆங்கிள் போஸில் மிரட்டல் போட்டோஷூட் !
சென்னை : மார்டன் அழகியான அஷிமா நர்வால் இணைத்தில் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.
தமிழில் இவர் நடித்தது என்னமோ ஒரே ஒரு திரைப்படம் என்றாலும் இணையத்தில் இவரை ஏகப்பட்ட ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.
தற்போது இவர், முன்னழகை காட்டிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை அப்லோடு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.

தமிழில் அறிமுகம்
விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவான கொலைகாரன் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு தனது அறிமுகத்தை கொடுத்தார் அஷிமா நர்வால். ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் திரைப்படமான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்த நிலையில் இவருக்கு வடவாய்ப்புகள் சரியாக வரவில்லை.
Recommended Video

அசத்தலான நடிப்பு
இவர், தெலுங்கில் நாட்டகம், ஜெஸ்ஸி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சமீபத்தில் வெளியான பிட்டா கதலு என்ற படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அஷிமா நர்வால். 4 பெண்களின் வெவ்வேறு பிரச்சினையை ஒன்றாக இணைத்து பின்னிபிணைக்கப்பட்ட கதை தான் பிட்டா கதலு. இதில் அமலாபால், ஸ்ருதிஹாசன், ஈஷா ரெபா மற்றும் அஷிமா நர்வால் நடித்திருந்தனர். இதில் அஷிமா இந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

ஆரவுக்கு ஜோடியாக
தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்து வரும் இவர், தமிழில் ராஜாபீமா என்ற படத்தில் பிக் பாஸ் புகழ் ஆரவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் நரேஸ் சம்பத் இயக்குகிறார். சுரவி ஃபிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரிக்கிறார்.

சூடேற்றும் கவர்ச்சி
இந்நிலையில், ஊரடங்கால் அனைத்து நடிகர் நடிகைகளும் வீட்டில் ஓய்வில் இருப்பதால், சமூகவலைத்தள பக்கத்தில் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர். அந்த வகையில் நடிகை அஷிமா நர்வாலும் இளைஞர்களை சூடேற்றும் வகையில் தனது வசீகரமான முன்னழகை காட்டி படு கவர்ச்சியான புகைப்படத்தை அப்லோடு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











