இனி "இந்த மாதிரியே" நடிக்கப் போறேன்.. முடிவெடுத்த ஆஷிமா.. ரசிகர்கள் குஷி!

சென்னை : விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவான கொலைகாரன் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் அஷிமா நர்வால். தற்போது இவர் தெலுங்கில் ஹிட்டாகியுள்ளார்.

ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் படமாக வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை.

ஆண்ட்ரே லூயிஸ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், சீதா, நாசர், பகவதி பெருமாள், சம்பத் ராம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில் நடித்த அஷிமா நர்வால், தற்போது பிட்டா கதலு என்ற ஆந்தலாஜி படத்தில் நடத்துள்ளார்

 அழகி பட்டம்

அழகி பட்டம்

மாடல் அழகியான இவர் , மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா, மிஸ் இந்தியா குளோபல் போன்ற இரண்டு அழகி பட்டங்களையும் வென்றுள்ளார். தமிழுக்கு இவர், புதிது என்றாலும் ஏற்கனவே தெலுங்கில் நாட்டகம், ஜெஸ்ஸி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இவர் தனது 10வது வயதிலேயே ஆஸ்திரேலியா சென்று விட்டார்.

 4 பெண்களின் கதை

4 பெண்களின் கதை

வெவ்வேறு பிரச்சினையில் வாழும் 4 பெண்களின் உணர்வுகளை ஒவ்வொரு கதையாக தொகுத்து அழகாக பின்னிபிணைக்கப்பட்ட கதையே பிட்டா கதலு. இப்படத்தில், அமலாபால், ஸ்ருதி ஹாசன், ஈஷா ரெபா, கொலைகாரன் படப் புகழ் அஷிமா நர்வால் ஆகிய முன்னணி நடிகைகள் நடித்துள்ள இந்த தொடர் இணையத்தை கலக்கி வருகிறது

 நெட் பிளிக்ஸிக்கு நன்றி

நெட் பிளிக்ஸிக்கு நன்றி

நெட் பிளிக்ஸில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று இணையத்தில் பலரின் பாராட்டுக்களை பெற்று வரும் இப்படம் குறித்து கொலைகாரன் பட நடிகை அஷிமா நர்மா கூறும் போது. முதலில் என் நன்றியை நெட் பிளிக்ஸிக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

Recommended Video

விஜய் படங்களில் புலி தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: கொலைகாரன் ஹீரோயின்-வீடியோ
 பலரும் பாராட்டுகின்றனர்

பலரும் பாராட்டுகின்றனர்

இப்படத்தில் பிங்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்திற்கும் வரவேற்பு என்னை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், இந்த தருணத்தை நான் என்றும் மறக்கவே மாட்டேன். பலரும் என்னை பாராட்டி வருகின்றனர் தொடர்ந்து இதுபோன்ற நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்து எடுத்து நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X