விஞ்ஞானியாக விரும்பினேன்.. அந்த ஒரு விஷயம்தான் எனக்கு நடிப்பு ஆசையை தூண்டியது.. நடிகை ஆஷிமா நர்வால்!
மும்பை: நடிகை ஆஷிமா நர்வால் தனக்கு நடிப்பு மீது எப்படி ஆர்வம் வந்தது என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.
கொலைகாரன் படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் நடிகை ஆஷிமா நர்வால். இவர் தான் சினிமாவுக்கு வந்தது குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதாவது விஞ்ஞானியாக வேண்டும் என்று விரும்பினாராம் ஆஷிமா நர்வால். ஆனால் படித்து முடித்ததும் ஆஸ்திரேலியாவில் வேலைக்கு சேர்ந்த விட்டாராம்.
அப்போது ஆஸ்திரேலியாவில் நடந்த அழகிப் போட்டியில் பங்கேற்ற ஆழிமா மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா எலிகன்ட் பட்டம் வென்றுள்ளார். அதுதான் அவரது ஆசையை மாற்றியதாம்.
அதுவரை விஞ்ஞானியாக வேண்டும் என்று ஆசைப்பட்ட ஆஷிமா, அதன்பிறகு, சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டதாக கூறியுள்ளார். இந்தியாவில் நடந்த அழகிப் போட்டியில், 'மிஸ் இந்தியா குளோபல்' பட்டத்தையும் பெற்றுள்ளார் ஆஷிமா.
தெலுங்கில் நாடகம், ஜெர்ஸி, தமிழில் கொலைகாரன் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆஷிமா தற்போது ராஜபீமா என்ற படத்தில் ஆரவ் ஜோடியாக டாக்டர் வேடத்தில் நடித்து வருவதாக கூறியுள்ளார். இதில் யானையுடன் நடித்துள்ளதாகவும் அந்த காட்சிகள் சவாலாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
நடிப்பு தவிர மருத்துவமனைகளுக்கும், வீடுகளுக்கும் இன்டீரியர் டெகரேஷன் செய்தி வரும் ஆஷிமா ஃபர்னீச்சர் பிசினஸும் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











