நடிப்பிலிருந்து ஒதுங்கினால் என்ன?.. பீக்கில் இருந்தபோதே அள்ளியாச்சு.. அசின் சொத்து மதிப்பு தெரியுமா?

சென்னை: Asin Birthday (அசின் பிறந்தநாள்) தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கலக்கிய அசின் இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கேரள மாநிலம் கொச்சியில் வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் நடிப்பு மீது ஆர்வம் ஏற்பட விளம்பரத்தில் நடிக்க ஆரம்பித்தார் அசின். அந்த விளம்பரத்திற்கு பிறகு மலையாளத்தில் 2001ஆம் ஆண்டு நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வாகா என்ற படத்தில் நடித்தார். முதல் படம் சுமாரான வரவேற்பை பெற்றதை அடுத்து தெலுங்கில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் ரவி தேஜாவுடன் ஒரு படத்திலும், நாகார்ஜுனாவுடன் ஒரு படத்திலும் 2003ஆம் ஆண்டு நடித்தார்.

Actress Asin Celebrates her 38th Birthday here We Look About Her Net worth

தமிழில் அசின்: தெலுங்கில் நடித்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாக அசின் மீது கவனம் பாய்ந்தது. இதனையடுத்து தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான எம்.கும்ரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் அறிமுகமானார். மலையாளம் கலந்த தமிழோடு பேசும் கதாபாத்திரத்தில் தோன்றிய அசின் ரொம்பவே கேஷுவலாக நடித்து அப்ளாஸை அள்ளினார். அந்தப் படம் ஹிட்டடித்தது.

டாப் நடிகை: அதனையடுத்து அசினுக்கு கோலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் காரணமாக சரசரவென்று முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்தார். விஜய்யுடன் நடித்த சிவகாசி, போக்கிரி ஆகிய இரண்டு படங்களும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. அதனையடுத்து சூர்யாவுடன் நடித்த கஜினி படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. தொடர்ந்து சூர்யாவுடன் வேல், அஜித்துடன் ஆழ்வார், வரலாறு கமலுடன் தசாவதாரம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

ஹிந்தியில் அசின்: தமிழில் கஜினி கொடுத்த வெற்றி அவரை பாலிவுட்டுக்கும் அழைத்து சென்றது. அங்கு சென்றும் தனது திறமையை காட்டிய அவர் சல்மான் கான், அஜய் தேவகான், அக்‌ஷய் குமார் உள்ளிட்டோருடன் நடித்து பீக்கிற்கு சென்றார். இடையே தமிழில் விஜய்யுடன் காவலன் படத்தில் நடித்தார். அந்தப் படமும் ஹிட்டானது. அதுதான் அவர் தமிழில் கடைசியாக நடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம்: அசின் தனது கரியர் உச்சத்தில் இருந்தபோதே கடந்த 2016ஆம் ஆண்டு ராகுல் ஷர்மா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அப்போதிருந்து சினிமாவில் தலைகாட்டாமல் இருந்துவருகிறார். அந்தத் தம்பதிக்கு ஆரின் என்ற ஒரு மகள் இருக்கிறார்.

அசின் சொத்து மதிப்பு: இந்த சூழலில் அசின் இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அசினின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அசின் மட்டுமே 117 கோடி ரூபாய்வரை சொத்து சேர்த்திருக்கிறாராம்.

மேலும் அவரிடம் ஆடி க்யூ 7, பென்ஸ் ஆகிய சொகுசு கார்கள் இருக்கின்றன. நடிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் தனது கணவருக்கு தொழிலில் உதவியாக இருந்துவருகிறாராம். 117 கோடி ரூபாய் என்பது அசின் மட்டுமே சம்பாதித்து சேர்த்த சொத்து என்றும் அவரது கணவர் ராகுல் ஷர்மாவின் சொத்தை சேர்த்தால் இன்னும் பல மடங்கு சொத்து மதிப்பு எகிறும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.

More from Filmibeat

Read more about: asin அசின்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X