வித்தியாசமான கெட்டப்பில் அசின்… இந்தியில் ரீ என்ட்ரி ஆகிறார்
சென்னை: நடிகை அசின் தற்போது ஒரு வித்தியாசமான கெட்டப்பில் ஒரு புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளார். அதில் வித்தியாசமான உடை, ஹேர் ஸ்டைல், முகச்சாயல் என, அட இது நம்ம அசினா என்கிற அளவிற்கு மெருகேறி இருக்கிறார். அவரின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
மலையாளத்தில் 2001ஆம் ஆண்டில் வெளியான நரேந்திரன் மகான் ஜெயகாந்தன் வாகா எனும் நகைச்சுவை படம் மூலம் திரையுலகிற்குள் கால் பதித்தது அசின் எனும் ஒரு மலபார் பெண்குட்டி.

அப்படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர்.
கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, ஜெயம் ரவி போன்ற முன்னணி ஹீரோக்களுடன் தமிழ் சினிமாவில் டூயட் பாடி கலக்கி வந்த அசின் பாலிவுட்டிற்குள் நுழைந்தார். அங்கே ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும் நல்ல வரவேற்பை பெற்றவர்.
சூர்யாவுடன் கஜினி படத்தில் நடித்த அசின் அதன் இந்தி ரீமேக் படத்தில் அமீர் கானுடன் இணைந்து நடித்தார். இந்தியிலும் கஜினி என்ற பெயரிலேயே உருவானது. அங்கும் இத்திரைப்படம் அபார வெற்றி பெற்று வசூல் சாதனை செய்தது. அதற்கு பிறகு அவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கு பிஸியாகி விட்டார்.
பாலிவுட்டை கலக்கிய அதே வேளையில், திடீரென தொழிலதிபர் ராகுல் ஷர்மாவை 2016ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்வில் செட்டிலானார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
கணவர் மற்றும் குழந்தையோடு இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார் அசின். சரி, இத்தோடு திரைப்பயணத்திற்கு முழுக்கு போட்டு விட்டார் என்று எண்ணிய வேளையில் தற்போது ஒரு வித்தியாசமான கெட்டப்பில் ஒரு புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளார்.
அதில் வித்தியாசமான உடை, ஹேர் ஸ்டைல், முகச்சாயல் என, அட இது நம்ம அசினா என்கிற அளவிற்கு மெருகேறி இருக்கிறார். அவரின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
அசின் மீண்டும் சினிமாவில் நடிக்கப்போகிறார் என்று ஏற்கனவே வெளியான தகவல், இந்த வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டது. கூடிய விரைவில் அசினை இந்தி திரைப்படங்களில் காணலாம்.
தமிழ் சினிமாவிலும் அவருக்கு வாய்ப்புகள் அளிக்க இயக்குநர்கள் காத்திருக்கின்றனர் ஆனால் தமிழ் சினிமாவில் அவர் ரீ-என்ட்ரி ஆவாரா. அவரை இந்த தமிழ் ரசிகர்கள் மீண்டும் ஏற்பார்களா என்பது வரப்போகும் நாட்களில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications











