இது லவ் மேரேஜ் இல்லையாம்.. சிவகார்த்திகேயன் பட ஹீரோயினுக்கு நாளை திருமணம்.. ரசிகர்கள் வாழ்த்து!

By

கொச்சி: சிவகார்த்திகேயன் பட ஹீரோயினின் திடீர் திருமணம் நாளை காலை நடக்கிறது.

எழில் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த படம், 'மனம் கொத்தி பறவை'.

இந்தப் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை ஆத்மியா.

போங்கடி நீங்களும்

போங்கடி நீங்களும்

இந்தப் படத்தைத் தொடர்ந்து, ராமகிருஷ்ணனுடன், போங்கடி நீங்களும் உங்க காதலும் என்ற படத்தில் நடித்தார். மலையாளத்தில் விஜய் சேதுபதி நடித்த மார்கோனி மத்தாய், சூப்பர் ஹிட்டான ஜோசப் உட்பட சில படங்களில் நடித்தார். இப்போது அவியல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வெள்ளை யானை

வெள்ளை யானை

தமிழில், சுப்ரமணிய சிவா இயக்கத்தில், சமுத்திரகனியுடன் வெள்ளை யானை என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் கொரோனா காலத்தில் கால்சென்டரில் பணிபுரிந்து மக்களுக்கு சேவை செய்தார். இந்நிலையில் இவருக்குத் திடீரென திருமணம் முடிவாகி உள்ளது.

கப்பலில் பணிபுரிகிறார்

கப்பலில் பணிபுரிகிறார்

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த சனூப் என்பவருடன் திருமணம் பேசி முடிக்கப் பட்டுள்ளது. சனூப் கப்பலில் பணிபுரிகிறார். இவர்கள் திருமணம் கண்ணூரில் நாளை காலை நடக்கிறது. இது காதல் திருமணம் அல்ல என்றும் பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம் என்றும் கூறப்படுகிறது.

திருமண வரவேற்பு

திருமண வரவேற்பு

அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நாளை மறுநாள் திருமண வரவேற்பு நடக்கிறது. இதில் திரையுலகினர் மணமக்களை வாழ்த்துகின்றனர். திருமணத்திற்கு பிறகும் ஆத்மியா தொடர்ந்து நடிக்க, சனூப் சம்மதம் சொல்லி இருக்கிறாராம். இதனால் அவர் தொடர்ந்து நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு சமூக வலைதளங்களில் இப்போதே ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X