நம்ம கோவை பொண்ணு அதுல்யா ரவிக்கும் இன்னைக்குத்தான் பர்த்டே!

சென்னை: காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அதுல்யா ரவி, இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

சமீபத்தில் வெளியான அடுத்த சாட்டை படத்தில் நடித்திருந்த அதுல்யா ரவிக்கு கோலிவுட் ரசிகர்கள் #HBDAthulyaRavi என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இளம் நடிகை அதுல்யா ரவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

எத்தனை வயசு

எத்தனை வயசு

1994ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி கோயம்புத்தூரில் பிறந்தவர் அதுல்யா. திவ்யா என்ற பெயரோடு கற்பகம் பொறியியல் கல்லூரியில் பயின்ற அவர், 2017ம் ஆண்டு வெளியான காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் அதுல்யா ரவியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

சமுத்திரகனி படங்கள்

சமுத்திரகனி படங்கள்

காதல் கண்கட்டுதே படத்தைத் தொடர்ந்து சமுத்திரகனியின் ஏமாளி, அடுத்த சாட்டை மற்றும் நாடோடிகள் 2 படத்திலும் அதுல்யா ரவி நடித்துள்ளார். மேலும், விக்ராந்தின் சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்திலும் அதுல்யா நடித்துள்ளார்.

க்யூட் குயின்

தனது அழகான சிரிப்பால் கோலிவுட் ரசிகர்களை கவர்ந்துள்ளார் அதுல்யா. அதுல்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர் அதுல்யாவின் ஓவியத்தை வரைந்து அவருக்கு ட்விட்டரில் பரிசளித்துள்ளார்.

ஸ்வீட் ஹார்ட்

அதுல்யா ரவியின் பிறந்த நாளை முன்னிட்டு #HBDAthulyaRavi என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி அதுல்யாவின் க்யூட் புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

விஜய்யுடன் நடிக்கணும்

அதுல்யா ரவியின் பிறந்த நாள் காமன் டிபியை பதிவிட்டு ஹேப்பி பர்த்டே கார்ஜியஸ் குயின் என பதிவிட்டுள்ள இந்த தளபதி ரசிகர், விரைவில் விஜய்யுடன் நீங்க நடிக்கணும் அதை நாங்கள் பார்க்கணும் என கோரிக்கை வைத்துள்ளார். அதே ஆசை எனக்கும் இருக்குப்பான்னு அதுல்யா ரவியின் மைண்ட் வாய்ஸ் இதை பார்த்தால் சொல்லும்.

டிரெண்டிங் குயின்

சமீபத்தில் இளைஞர்களின் மனங்களை கவர்ந்து டிரெண்டிங் குயினாக அதுல்யா ரவி மாறியுள்ளார். அதன் எதிரொலி தான் இந்த அளவுக்கு அவரது பிறந்த நாள் டிரெண்டாகி வருவதற்கு காரணமாம்.

க்யூட் ஏஞ்சல்

அதுல்யா ரவியின் அழகிய தருணங்களை மாஷ்-அப்பாக பதிவிட்டு, ஹேப்பி பர்த்டே மை க்யூட் ஏஞ்சல் என இந்த ரசிகர் ட்வீட் போட்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X