5வது நாளே இப்படியா.. தம்பியுடன் குடுமி பிடி சண்டையில் குதித்த பிரபல நடிகை.. தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் பிரபல நடிகை தனது சகோதரருடன் முடியை பிடித்துக்கொண்டு சண்டை போடும் வீடியோ வைரலாகியுள்ளது.
Recommended Video
நடிகை அதுல்யா ரவி கோயம்புத்தூரை பூர்விகமாக கொண்டவர். கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை கேப்மாரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் நாடோடிகள் 2 படம் வெளியானது.

ஊரடங்கு உத்தரவு
வட்டம் படத்தில் நடித்து வருகிறார் நடிகை அதுல்யா ரவி. இந்தப் படத்தில் சிபிராஜ், நிக்கி கல்ராணி, ஆண்ட்ரியா ஜெர்மையா ஆகியோர் நடித்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

குவாரண்டைன் காலம்
இதன் காரணமாக நாடு முழுவதும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நடிகைகள் மற்றும் நடிகர்கள் வேலையின்றி வீட்டில் உள்ளனர். அவர்கள் தங்களின் குவாரண்டைன் காலத்தை எப்படி கழிக்கிறார்கள் என்பது குறித்து நாள்தோறும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

தம்பியுடன் சண்டை
சிலர் வீட்டு வேலை செய்வது, உடற்பயிற்சி செய்வது, சமைப்பது என நேரத்தை கழித்து வருகின்றனர். அந்த வீடியோக்களை தங்களின் சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை அதுல்யா ரவி தன்னுடைய குவாரண்டைன் காலம் குறித்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

5வது நாளே இப்படியா..
அதில் தன்னுடைய சகோதரருடன் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார் அதுல்யா, இருவரும் ஒருவர் முடியை ஒருவர் மாற்றி மாற்றி பிடித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் சண்டை போட்டு வருகின்றனர். அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அதுல்யா, 5வது நாளே நானும் என் தம்பியும் சண்டை போட ஆரம்பித்து விட்டோம் என பதிவிட்டுள்ளார்.
இப்படிதான் விளையாடுவோம்
மேலும் இது செல்லமான விளையாட்டு சண்டைதான் என குறிப்பிட்டுள்ளார். மேலும் குடும்பம் என்று வரும் தனக்கு லாஜிக்கும் இல்லை முதிர்ச்சியும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். நாங்கள் எப்போதும் இப்படிதான் விளையாடுவோம் சண்டை போடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார் அதுல்யா ரவி.
பிக்பாஸ் போல..
அதுல்யா ரவியின் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதன்படி, வீட்டுகுள்ளேயே இருக்க சொன்னா, நீங்க என்ன பிக்பாஸ் போல நாள் எண்ணுறீங்க, என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











