திருமணத்திற்கு முன் ரிலேஷன்ஷிப்.. அதுல என்ன தப்பு.. ஓபனாக பேசிய அதுல்யா ரவி!
சென்னை: திருமணத்திற்கு முன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதில் தவறு இல்லை என நடிகை அதுல்யா ரவி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
காதல் கண் கட்டுதே க்யூட்டான அழகு பதுமையாக வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அதுல்யா. அந்த படத்தில் இவரின் வசீகரமான கோலிகுண்டு கண்ணைப் பார்த்தே பல இளசுகள் அவுட்டாகிப் போனார்கள்.

முதல் படத்திலேயே பேமஸான அதுல்யா ரவி, ஏமாளி, கேப்மாரி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களில் நடித்தார்.
அதுல்யா ரவி: மீட்டர் என்கிற படத்தின் மூலம் டோலிவுட் பக்கம் சென்ற அதுல்யா ரவி தற்போது ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக டீசல் என்கிற படத்தில் நடித்துள்ளார்.திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் நவம்பர் மாதம் தியேட்டரில் வெளியாக உள்ளது.

சரியான வயசு எது: எந்த படமும் கைவசம் இல்லாததால்,ஜாலியாக பொழுதை கழித்து வரும் நடிகை அதுல்யா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், வெர்ஜினிடியை இழக்க சரியான வயது எது? என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், என்னை பொறுத்தவரை 21 வயது முதல் 25 வயது தான் இதற்கு சரியான வயது என்று நான் நினைக்கிறேன் என்றார்
திருமணத்திற்கு முன் ரிலேஷன்ஷிப்: இதையடுத்து, திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வது சரியா..? அல்லது திருமணத்திற்கு பிறகு உடலுறவு கொள்வது சரியா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அதுல்யா, திருமணத்திற்கு பிறகான உடலுறவு என்பது நம்முடைய கலாச்சாரம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், என்னை பொறுத்தவரை திருமணத்திற்கு பிறகு உறவு கொள்வது தான் சரியாக இருக்கும்.

தனிப்பட்ட விருப்பம்: ஆனால் மாறிவரும் கால சூழ்நிலையில் பலரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள். அது ஒவ்வொரு தனிப்பட்டவரின் முடிவு. அதில், மூக்கை நுழைக்க யாருக்கும் உரிமை கிடையாது. அதே சமயம், நம்முடைய கலாச்சாரத்தின் படி இருக்க வேண்டும் என்றால் திருமணத்திற்கு பிறகு உறவு கொள்வது தான் சரியாக இருக்கும் என்றார். மேலும், நான் கசமுசா படத்தை பார்த்ததே இல்லை. பார்க்கவேண்டும் என்று நினைத்ததுக்கூட இல்லை, சினிமாவிற்கு வந்த பின் மற்ற மொழிப்படங்களை மட்டுமே பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் என அதுல்யா ரவி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications











