Just In
- 4 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 5 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 7 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 7 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹீரோ, ஹீரோயின் நெருக்கம்...பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பிரபல நடிகையின் அம்மா பரபரப்பு சாட்சியம்
கொச்சி: பிரபல நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில், புகழ்பெற்ற கதாநாயகியின் அம்மா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த மலையாள முன்னணி நடிகை ஒருவர், கடந்த 2017 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புகார் எழுந்தது.
இந்தச் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடையதாகக் கூறி, நடிகர் திலீப்பை கைது செய்த போலீசார், கொச்சி ஆலுவா சிறையில் அடைத்தனர்.

திலீப் மனு தள்ளுபடி
85 நாட்கள் சிறையில் இருந்த திலீப், பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கின் சிறப்பு விசாரணை, கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் திலீப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆறு மாதத்தில்
மேலும் இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை 6 மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதனால் இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.

136 சாட்சிகள்
இதன் மூலம் இந்த வழக்கு கேரளாவில் சூடு பிடிக்கத் தொடங்கியது. இந்த வழக்கில் 136 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். தினமும் ஒருவர் வாக்குமூலம் அளித்து வருகின்றனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையும் அவர் குடும்பத்தினரும் ஏற்கனவே வாக்குமூலம் அளித்துவிட்டனர். இதையடுத்து, நடிகரும் இயக்குனருமான லால், நடிகை ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ் உட்பட பலர் வாக்குமூலம் அளித்தனர்.

ரம்யா நம்பீசன்
இந்நிலையில், நடிகை காவ்யா மாதவனின் அம்மா, ஷ்யாமளா நேற்று வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் ஏற்கனவே திலீப்புக்கும் காவ்யாவுக்குமான நெருக்கம் பற்றி திலீப்பின் மனைவி மஞ்சு வாரியரிடம் முன்பே தெரிவித்ததாகக் கூறியிருந்தாராம். அப்போது காவ்யாவும் திலீப்பும் திருமணம் செய்து கொள்ள வில்லை.

காவ்யா மாதவன்
ஷ்யாமளா கொடுத்த வாக்குமூலம் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் திருப்பு முனையாக அமைந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று அவர் சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். அதேபோல மலையாள நடிகர் சங்கம் நடத்திய விழா ஒன்றில், நடிகர் திலீப்பும் தாக்கப்பட்ட நடிகையும் கலந்து கொண்டனர்.

இடவேளா பாபு
அப்போது அனைவர் முன்பும் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. இந்த விவகாரம் பற்றி, நடிகர் சங்கப் பொறுப்பில் இருந்த இடவேளா பாபுவும் நேற்று சாட்சியம் அளித்துள்ளார். மஞ்சு வாரியரை விவாகரத்து செய்த திலீப், பின்னர் காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.