கொரோனா காரணமாக தடைபட்ட.. பிரபல நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை.. மீண்டும் தொடக்கம்!

By

கொச்சி: பிரபல நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கின் விசாரணை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.

Recommended Video

எனது 25 வயது வரை தற்கொலை செய்யவே எண்ணினேன் - ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த மலையாள முன்னணி நடிகை ஒருவர், கடந்த 2017 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புகார் எழுந்தது.

இந்தச் சம்பவம் தென்னிந்திய சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடையதாகக் கூறி, நடிகர் திலீப்பை கைது செய்த போலீசார், கொச்சி ஆலுவா சிறையில் அடைத்தனர்.

திலீப் மனு தள்ளுபடி

திலீப் மனு தள்ளுபடி

85 நாட்கள் சிறையில் இருந்த நடிகர் திலீப், பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை, கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் திலீப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சிறப்பு நீதிமன்றம்

சிறப்பு நீதிமன்றம்

மேலும், இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை 6 மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதனால் இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்தது. இந்த வழக்கு சூடு பிடிக்கத் தொடங்கியது. 136 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நடிகை ரம்யா நம்பீசன்

நடிகை ரம்யா நம்பீசன்

தினமும் ஒருவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்து வந்தனர். பாதிக்கப்பட்ட நடிகை, நடிகரும் இயக்குனருமான லால், நடிகை ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், காவ்யா மாதவனின் அம்மா, ஷ்யாமளா, இடவேளை பாபு உட்பட பலர் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த வழக்கு விசாரணை கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதியோடு நிறுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட நடிகை

பாதிக்கப்பட்ட நடிகை

இந்நிலையில், கேரளாவில் கொரோனா கட்டுக்குள் இருப்பதால் இந்த வழக்கு விசாரணையை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. இதில் பாதிக்கப்பட்ட நடிகையிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட இருக்கிறது. மூன்று நாட்கள் இந்த விசாரணை நடக்கும். பின்னர் நடிகையின் சகோதரர், நடிகர் லால், நடிகை ரம்யா நம்பீசனிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X