நடிகை கடத்தப்பட்ட வழக்கு.. 'ஒருதலைபட்சம்..' வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற ஹீரோயின் திடீர் மனு!

By

கொச்சி: நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி, பாதிக்கப்பட்ட நடிகை மனு அளித்துள்ளார்.

தமிழ், மலையாளம், கன்னட படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த பிரபல நடிகை, கடந்த 2017 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புகார் எழுந்தது.

இந்தச் சம்பவம் தென்னிந்திய சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடையதாகக் கூறி, மலையாள ஹீரோ திலீப்பை போலீசார் கைது செய்தனர்.

சிறை வாசம்

சிறை வாசம்

கொச்சி ஆலுவா சிறையில் அவர் அடைக்கப்பட்டு இருந்தார். 85 நாட்கள் சிறையில் இருந்த திலீப், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை, கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் திலீப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

விசாரணை நீட்டிப்பு

விசாரணை நீட்டிப்பு

இந்த வழக்கு விசாரணையை 6 மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் வழக்கு விசாரணை, சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்தது. இந்த விசாரணை கொரோனா காரணமாக மார்ச் மாதம் 24 ஆம் தேதியோடு நிறுத்தப்பட்டது. பின்னர் மேலும் ஆறு மாதங்கள் விசாரணை நீட்டிக்கப்பட்டது.

காவ்யா அம்மா

காவ்யா அம்மா

பாதிக்கப்பட்ட நடிகை, அவரது சகோதரர், நடிகரும் இயக்குனருமான லால், நடிகை ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், காவ்யா மாதவனின் அம்மா ஷ்யாமளா, நடிகர் எடவெலா பாபு உட்பட பல நடிகர், நடிகைகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார்.

மாற்ற வேண்டும்

மாற்ற வேண்டும்

அவர் தாக்கல் செய்த மனுவில், என் வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது என்றும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் எனவே விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மனரீதியாக சித்திரவதை

மனரீதியாக சித்திரவதை

விசாரணை என்ற பெயரில் எதிர்தரப்பு வழக்கறிஞர் தன்னை மனரீதியாக சித்திரவதை செய்ததாகவும் அப்போது நீதிமன்றம் கேள்வி கேட்கவில்லை என்றும் அவர் அந்த மனுவில் கூறியுள்ளார். விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற அரசு தரப்பு வழக்கறிஞரும் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X