17 வயதில் திருமணம்..ஓராண்டில் முடிந்த வாழ்க்கை.. அவர் இறந்தப்ப கூட போகல.. நடிகை பேபி அஞ்சு வேதனை!
சென்னை: உதிரிப்பூக்கள், மீண்டும் கோகிலா, டார்லிங் டார்லிங் டார்லிங் உள்ளிட்ட பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பேபி அஞ்சு. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு என 40க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் பல திரைப்படத்தில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். சினிமாவில் காணாமல் போன இவர் தனது, கசந்த திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்த பேசி உள்ளார்.
அழகான க்யூட் பேபியாக உதிரிப்பூக்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அஞ்சு. அந்த படத்தைத் தொடர்ந்து பல திரைப்படத்தில் நடித்தார். தமிழில் இவர் கேளடி கண்மணி படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். திடீர் என இவர் எடை அதிகரித்துவிட்டதால், தமிழில் வாய்ப்பு குறைய மலையாளம் பக்கம் சென்ற இவருக்கு நல்ல எதிர்காலம் இருந்தது.

நடிகை அஞ்சு: மலையாளம், தமிழ் என பிஸியாக நடித்து வந்த இவர் தன்னை விட 31 வயது அதிகமான நடிகர் டைகர் பிரபாகர் என்பவரை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து 1996ஆம் ஆண்டு விவாகரத்தையும் பெற்றுள்ளார். தற்போது இவர்களுக்கு 25 வயதில் ஒரு மகன் உள்ளார். கன்னட நடிகரான டைகர் பிரபாகர் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர், அன்புக்கு நான் அடிமை, அன்னை பூமி, அண்ணாமலை, பாண்டியன், முத்து போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் அல்போன்சா மேரி, நடிகை ஜெயமாலா உள்பட 3 பேரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தான் நான்காவதாக அஞ்சுவை காதலித்து மணந்தார். டைகர் பிரபாகர் காதலித்த போது அஞ்சுக்கு வயது 17, டைகர் பிரபாகருக்கு 48 வயது.
விவாகரத்து செய்தேன்: இந்நிலையில் தன் வாழ்க்கை குறித்து பேசிய அஞ்சு, எனது தந்தை வயதில் இருந்தவரை காதலித்தேன், குடும்பத்தார் எதிர்ப்பை மீறி அவரை மணந்தேன், அப்போதுதான் அவருக்கு ஏற்கெனவே 3 திருமணங்கள் நடந்து அவரது பிள்ளைகள் என்னை விட மூத்தவர்கள் என்பது எனக்கு தெரிந்து மிகவும் வருத்தப்பட்டேன். நான் கர்ப்பமாக இருந்த போது அவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பில் அவரை பிரிந்து விவாகரத்து பெற்றேன்.
இறந்த போதுக்கூட போகல: அதன் என் குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும் போது அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்தது. என் அம்மா வா போய் பாக்கலாம் என்று அழைத்தார். நான் வரமாட்டேன் என்றேன், நான் கடைசியாக அவரிடம் நீ செத்தாலும் சரி... நான் செத்தாலும் சரி இந்த வீட்டு வாசலை மிதிக்கமாட்டேன் என்று சொல்லிட்டு வந்தேன். அவர் இறந்த போது முகத்தைக்கூட நான் பார்க்க போகவில்லை. என் மகன் அவங்க அப்பாவை பார்த்ததே இல்லை. டிவியில் தான் அவர் நடித்த படத்தை காட்டி இவர் தான் உன் அப்பா என்று காட்டினேன் என்றார்.
மீண்டும் சினிமாவில்: மீண்டும் நடிக்க வந்து வீராப்பு, பொல்லாதவன் போன்ற படத்தில் நடித்தேன், பிறகு, ஒரு எட்டு வருடமாக நான் சினிமா பக்கம் வரவில்லை. ஏன் என்றால் என் அம்மா இறந்துவிட்டார்கள். இதனால், சினிமாவும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று ஆஸ்திரேலியாவில் என் அண்ணன் வீட்டில் செட்டிலாகி விட்டேன். தற்போது ஒரு படத்தில் கமிட்டாகி நடித்துக்கொண்டு இருக்கிறேன். இதற்கு பிறகு மீண்டும் என்னை திரையில் பார்க்கலாம் என்று நடிகை அஞ்சு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











