மொட்டை மாடியில் சரக்கும் கையுமாக ஹாயா ஒரு போஸ்.. என்ன செல்லம் இதெல்லாம் !
மும்பை: நடித்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை வசியம் செய்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை பனிடா சந்து..
இந்தித் திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர் இப்பொழுது சர்தார் உதாம் சிங் திரைப்படத்தில் விக்கி கௌஷல் உடன் இணைந்து நடித்து வருகிறார்.
ஆதித்ய வர்மா திரைப்படத்திற்கு பிறகு அடுத்த திரைப்படத்தை ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் மொட்டை மாடியில் சரக்கும் கையுமாக உட்கார்ந்திருக்கும் பனிடா சந்துவின் புகைப்படம் இப்பொழுது பலரையும் அதிர வைத்துள்ளது.

புதுவரவாக
தமிழ் சினிமாவிற்கு புதுவரவாக ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட நடிகை பனிடா சந்து இந்தியில் வெளியான அக்டோபர் திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டவர்.

காண ஆவலுடன்
அதைத் தொடர்ந்து தமிழில் ஆதித்ய வர்மா என்ற படத்தில் நடித்து தமிழிலும் தனது அறிமுகத்தை கொடுத்த இவர் நேரடி ஆங்கிலத் திரைப் படங்களிலும் நடித்துள்ளார். எனினும் ஆதித்ய வர்மா திரைப்படத்தில் இவரது நடிப்பு பிரபலமாக பேசப்பட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் இவரை தமிழ் திரைப்படங்களில் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சரக்கும் கையுமாக
இந்நிலையில் இந்தியில் சர்தார் உதாம் சிங் என்ற திரைப்படத்தில் விக்கி கௌஷலுடன் இணைந்து நடித்து வரும் பனிடா சந்து அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில் இப்பொழுது சரக்கும் கையுமாக சர்ச்சைக்குரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

என்ன செல்லம் இதெல்லாம்
லாக் டவுனில் படப்பிடிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டு நடிகர் நடிகைகள் பலரும் வீட்டில் முடங்கியுள்ள நிலையில் இப்பொழுது படிப்படியாக தொற்று குறைந்து படப்பிடிப்புகள் மெல்ல மெல்ல ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பனிடா சந்து லாக் டவுனில் ரூப் டாப்பில் சரக்கு பாட்டில் மற்றும் கிளாஸ் உள்ளிட்டவைகளுடன் ஹாயாக உட்கார்ந்து கொண்டு வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் அதிர்ந்து போயுள்ள நிலையில், பலரும் என்ன செல்லம் இதெல்லாம் என்ன அக்கறையுடன் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











