சாவித்ரிக்காக டப்பிங் ஆர்டிஸ்டாக மாறிய பானுப்ரியா

By Vignesh Selvaraj

Recommended Video

சாவித்ரி ஜெமினி மாதிரி கீர்த்தி சுரேஷும் துல்கரும்- வீடியோ

சென்னை : தென்னிந்திய சினிமாவில் நூற்றுக்கணக்ககான படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை பானுப்பிரியா. திருமணத்திற்கு பிறகு குணச்சித்திர நடிகையாக உருவெடுத்த பானுப்பிரியா சில படங்களில் அம்மா வேடங்களிலும் நடித்தார்.

கடைசியாக 'சிவலிங்கா', 'மகளிர் மட்டும்' ஆகிய படங்களிலும் நடித்தார். தொலைக்காட்சி சீரியல்களில் நாயகியாகவும் நடித்து வந்தார் பானுப்பிரியா. இந்நிலையில், தற்போது அவர் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் மாறியுள்ளார்.

Actress banupriya becomes dubbing artist

இதுவரை தனக்குத்தானே டப்பிங் பேசி வந்துள்ள பானுப்பிரியா, சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியுள்ள 'மகாநதி' படத்தின் தமிழ் வெர்சனான 'நடிகையர் திலகம்' படத்திற்கு டப்பிங் ஆர்ட்டிஸ்டாகி இருக்கிறார்.

பானுப்பிரியா, 'நடிகையர் திலகம்' படத்தில் இடம்பெற்றுள்ள எந்த கேரக்டருக்கு குரல் கொடுத்துள்ளார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தற்போது இப்படத்தின் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி டப்பிங் வேலைகளும் துரிதமாக நடந்துவருகிறது.

ஒருகாலத்தில், குடும்பப்பாங்கான நடிகையாக ரசிகர்களை ஈர்த்த பானுப்பிரியாவை காலம் வாய்ஸ் ஆர்டிஸ்ட் ஆக்கியிருக்கிறது பாவம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X