கணவர் இறந்த செய்தியை கேட்டு பிக்பாஸ் வீட்டில் கதறியழுத நடிகை.. சோகத்தில் மூழ்கிய பார்வையாளர்கள்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை தனது கணவர் இறந்த தகவலை கேட்டு கன்ஃபெஷன் ரூமில் கதறியழுத சம்பவம் பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்தி மொழியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, தமிழ் உட்பட நாட்டின் பல்வேறு மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

தமிழில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில் மலையாளத்தில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

நடிகர் மோகன் லால்..

நடிகர் மோகன் லால்..

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக மலையாள மொழியிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தாமதமாகதான் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார்.

டப்பிங் ஆர்ட்டிஸ்ட்

டப்பிங் ஆர்ட்டிஸ்ட்

இதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் டப்பிங் ஆர்டிஸ்ட்டும் குணச்சித்திர நடிகையுமான பாக்கியலட்சுமி போட்டியாளராக கலந்துக் கொண்டுள்ளார்.

நதியா, அமலா, ஊர்வசிக்கு..

நதியா, அமலா, ஊர்வசிக்கு..

10 வயதில் குழந்தை டப்பிங் ஆர்டிஸ்டாக சினிமாவில் நுழைந்த இவர், நடிகைகள் மேனகா, நதியா, அமலா, ஷோபனா, ரேவதி, ஊர்வசி, லிஸி, ரோகினி, ரம்யா கிருஷ்ணன், ரேகா, ஜோதிகா, நயன்தாரா, நித்யா மேனன் என பலருக்கும் மலையாளத்தில் டப்பிங் பேசியுள்ளார்.

பிக்பாஸில் பாக்கியலட்சுமி

பிக்பாஸில் பாக்கியலட்சுமி

அதோடு சிறந்த டப்பிங் கலைஞருக்கான கேரள மாநில விருதை 5 முறை வென்றிருக்கிறார் பாக்கியலட்சுமி. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் பாக்கியலட்சுமியை கன்ஃபெஷன் அறைக்கு வரும்படி அழைத்தார் பிக்பாஸ்.

கணவர் மரணம்..

கணவர் மரணம்..

அங்கு சென்ற அவருக்கு யாரும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. அதாவது அவருடைய முன்னாள் கணவர் உடல்நலக்குறைவு காரணமாக காலமாகி விட்டதை பிக்பாஸ் தெரிவித்தார். இதைக் கேட்ட பாக்கியலட்சுமி, கதறியழுதார்.

விவாகரத்தாகிவிட்டதால்..

விவாகரத்தாகிவிட்டதால்..

பின்னர் கணவரின் இறுதி சடங்கிற்கு செல்லப் போகிறீர்களா? என பிக்பாஸ் கேட்டார். அதற்கு தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதால் இறுதிச்சடங்கில் பங்கேற்பதில் சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டும். எனவே தனது மகன்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

கோரிக்கையை ஏற்ற பிக்பாஸ்

கோரிக்கையை ஏற்ற பிக்பாஸ்

மேலும் இது குறித்து அவர்களிடம் போனில் பேச மட்டும் ஏற்பாடு செய்து தாருங்கள் என்றும் பாக்கியலட்சுமி கேட்டுக்கொண்டார். பாக்கியலட்சுமியின் கோரிக்கையை ஏற்ற பிக்பாஸ் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக தெரிவித்தார்.

சோகத்தில் பார்வையாளர்கள்

சோகத்தில் பார்வையாளர்கள்

பின்னர் வெளியில் வந்த அவர், தனது கணவருக்கு சிறுநீரக கோளாறு இருந்ததாகவும், மாற்று சிறுநீரகம் தான் தருவதாக சொன்ன போதும், ஈகோ காரணமாக அவர் அதை மறுத்து விட்டார் எனவும் அழுதுக் கொண்டே கூறினார். இதனை பார்த்த பார்வையாளர்களும் சோகத்தில் மூழ்கினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X