நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் வாழ்த்த... கோட்டயம் ஹோட்டலில் நடிகை பாமாவுக்குத் திருமணம்

By

கொச்சி: நடிகை பாமா- அருண் திருமணம் கேரள மாநிலம் கோட்டயத்தில் இன்று காலை நடந்தது.

ஆர்.கே.நடித்த, எல்லாம் அவன் செயல் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகை பாமா. அந்தப் படத்தில் மணிவண்ணன் மகளாக அவர் நடித்திருந்தார்.

தொடர்ந்து சேவற்கொடி, ராமானுஜம் உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்த பாமா, மலையாளம், கன்னடப் படங்களில் தொடர்ந்து நடித்துவந்தார்.

தொழில் அதிபர்

இவருக்கும் கேரளாவில் உள்ள சென்னிதாலாவைச் சேர்ந்த அருண் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் கொச்சியில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அருண், கனடாவில் படித்தவர்.

மெஹந்தி

மெஹந்தி

பாமா அக்கா கணவரின் வகுப்புத் தோழரான அருண் துபாயில் தொழில் அதிபராக இருக்கிறார். இந்நிலையில், பாமாவின் மெஹந்தி நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன் கொச்சியில் நடந்தது. இந்த புகைப்படங்களை பாமா, தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த படங்கள் வைரலானது.

திருமணம்

திருமணம்

இந்நிலையில் இவர்கள் திருமணம் கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் இன்று காலை நடந்தது. இந்த திருமணத்தில் நடிகர் சுரேஷ்கோபி, நடிகைகள் மியா ஜார்ஜ், விந்தியா உட்பட சிலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு பிறகு பாமா படங்களில் நடிப்பாரா என்பது தெரியவில்லை.

வாழ்த்துகள்

திருமணத்தை அடுத்து கொச்சியில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இதில் திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துவார்கள் என்று தெரிகிறது. பாமாவின் திருமணப் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X