கோர்ட்டில் அப்படியே மாற்றிச் சொன்ன பிரபல நடிகை.. சோசியல் மீடியாவில் விளாசித் தள்ளும் நெட்டிசன்ஸ்!
கொச்சி: நடிகை கடத்தப்பட்ட வழக்கில், நடிகருக்கு ஆதரவாக பல்டி அடித்ததை அடுத்து, பிரபல நடிகையை சமூகவலைதளங்களில் நெட்டிசன்ஸ் விளாசி வருகின்றனர்.
பிரபல மலையாள நடிகை ஒருவர், கடந்த சில வருடங்களுக்கு முன் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புகார் எழுந்தது.
இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அந்த நடித்து வந்தார்.

சிறையில் அடைத்தனர்
மலையாள நடிகர் திலீப் தூண்டுதலின் பேரில்தான் இது நடந்தது என்று கூறி அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். அங்கு 85 நாட்கள் சிறையில் இருந்த அவர், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை, சிறப்பு நீதிமன்றத்தில் இப்போதும் நடந்து வருகிறது. இப்போது சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

வாக்குவாதம்
முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக சாட்சியம் அளித்த பலர் பின்னர் பல்டி அடித்தனர். மலையாள நடிகர் சங்க கலை நிகழ்ச்சியை ஒட்டி நடந்த ஒத்திகையின் போது நடிகர் திலீப்புக்கும், பாதிக்கப்பட்ட நடிகைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தாங்கள் பார்த்ததாக நடிகை பாமாவும், நடிகர் சித்திக்கும் முதலில் தெரிவித்திருந்தனர்.

தங்களுக்கு தெரியாது
இதனால் இவர்கள் போலீஸ் தரப்பு சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இவர்கள், நீதிமன்றத்தில் திலீப்புக்கும் அந்த நடிகைக்கும் இடையே நடந்த மோதல் பற்றி தெரியாது என்று கூறியதால், பிறழ் சாட்சிகளாக அறிவிக்கப்பட்டனர். இது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது.

நடிகை ரேவதி விளாசல்
பாதிக்கப்பட்ட நடிகைக்கு நெருங்கிய தோழியாக இருந்தார். அதோடு திலீப் மனைவி காவ்யா மாதவனுக்கும் அவர் தோழியாக இருந்தார். பாமாவின் இந்த முடிவை எதிர்பார்க்காத நடிகை ரேவதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் ஆகியோர் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். 'சினிமா துறையில் சக கலைஞர்களையே நம்ப முடியவில்லை என்பது வேதனையாக இருக்கிறது என்று கூறியிருந்தார் ரேவதி.

நெட்டிசன்ஸ் விளாசல்
இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் நடிகை பாமாவை நெட்டிசன்ஸ் விளாசித் தள்ளியுள்ளனர். அவருடைய செயல் ஏற்க கூடியதாக இல்லை என்றும் இதை அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை எனவும் தனது தோழிக்கு பாமா செய்தது பச்சைத் துரோகம் என்றும் கடுமையாக விளாசி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகை பாமா, தமிழில் எல்லாம் அவன் செயல் படத்தில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











