சத்தம் போடாமல் காதலரை மணந்துகொண்ட அந்த ஹீரோயின்... ரகசியமாக இணையத்தில் கசிந்தது கல்யாண போட்டோ

By

சென்னை: தமிழில் நடித்து வந்த பஞ்சாபி நடிகை, திடீரென சத்தம்போடாமல் தனது காதலரை திருமணம் செய்துகொண்டார்.

தமிழில், அருள்நிதி நடித்த உதயன், விழி மூடி யோசித்தால் உட்பட சில படங்களில் நடித்தவர் பானு ஶ்ரீ மெஹ்ரா.

பரத், பிரேம்ஜி அமரன், ஸ்வாதி, ரமணா நடித்திருந்த சிம்பா படத்திலும் இவர் ஹீரோயினாக நடித்திருந்தார். அரவிந்த் ஶ்ரீதர் இயக்கியிருந்த இந்தப் படம் கடந்த வருடம் வெளியானது.

அல்லு அர்ஜூன்

அல்லு அர்ஜூன்

தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக வருடு படத்தில் நடித்திருந்தார். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு, பஞ்சாபி படங்களிலும் நடித்துவந்தார்.

வாய்ப்புகள் இல்லை

வாய்ப்புகள் இல்லை

இந்நிலையில், கடந்த ஒருவருடமாக அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இதனால் பெற்றோர் திருமணம் செய்துகொள்ளும்படி கூறினர்.

காதல்

காதல்

இதற்கிடையே இவர், கரண் மன்ஹஸ் என்ற இளைஞரை கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார். இந்த காதலுக்கு இருவீட்டு குடும்பத்தினரும் பச்சைக்கொடி காட்டினர்.

திருமணம்

திருமணம்

இதையடுத்து இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த திருமணம் கடந்த நவம்பர் மாதம் நடந்துள்ளது.

அழைப்பு இல்லை

அழைப்பு இல்லை

இதில் வேறு யாருக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை. குறிப்பாக தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

புகைப்படம்

புகைப்படம்

இந்நிலையில் இந்த திருமணத் தகவல் இப்போதுதான் வெளியே தெரியவந்துள்ளது. இவர்கள் திருமண புகைப்படம் இணையத்தில் கடந்த சில நாட்களாக கசிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X