Bhanupriya Mother Death: நடிகை பானுப்பிரியாவின் தாய் மாரடைப்பால் உயிரிழந்தார்!
சென்னை: நடிகை பானுப்பிரியா மற்றும் சாந்திப்ரியாவின் தாயாரான எம். லட்சுமி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரக்கு வயது 83. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தாயை இழந்து வாழும் நடிகை பானுப்பிரியா மற்றும் சாந்திப்ரியாவிற்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
ஆராரோ ஆரிராரோ என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் பானுப்பிரியா. அந்த படத்தை தொடர்ந்து, தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் சுமார் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு காலத்தில் உச்ச நடிகையாக இருந்த இவர் பின் வாய்ப்புகள் குறைவுடன் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது சினிமாவில் தலைகாட்டாமல் இருக்கிறார்.
சாந்திப்ரியா: நடிகை பானு பிரியாவின் சகோதரியான சாந்தி பிரியா, நடிகர் ராமராஜனுடன் 'எங்க ஊரு பாட்டுக்காரன்' படத்தின் நாயகியாக நடித்திருந்தார். கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் இடம் பெற்ற 'செண்பகமே செண்பகமே' பாடல் சாந்தி பிரியாவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அந்த நேரத்தில் கொடிகட்டி பறந்த இவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். தற்போது, மீண்டும் சினிமாவில் என்ட்ரியாகி 'பேர்ட் கேர்ள்' படத்தில் நடித்திருந்தார்.

தாய் காலமானார்: நடிகைகள் பானுப்ரியா மற்றும் சாந்திப்ரியாவின் தாயாரான எம். லட்சுமி காலமானார். ஞாயிற்றுக்கிழமை இரவு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித் நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அவருக்கு வயது 83. அவரது இறுதிச் சடங்குகள் நேற்று 3 மணி அளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.


Click it and Unblock the Notifications











