பாவனாவின் சொல்ல முடியாத மன வலிகள்...செய்யாறு பாலு பகிர்ந்த வேதனை கதை!

சென்னை: நடிகை பாவனாவுக்கு நடந்த கோரசம்பவத்தால், சொல்ல முடியாத பல வலிகளை அனுபவித்தார் என்று மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாகவும் இளைஞர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை பாவனா.

இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிப் படங்களில் நடித்து தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

actress bhavana emotional story shared by cheyyar balu

சாதாரண குடும்பம்: நடிகை பாவனாவின் முதல் படம் சித்திரம் பேசுதடி, இந்த படம் இயக்குநர் மிஸ்கினுக்கும் முதல் படம். நடிகை பாவனா சாதாரண மிடில்கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர் இவருக்கும் சினிமாவிற்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. அவர் பிளஸ் 2 படித்துக்கொண்டு இருந்த நேரத்தில், ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த போது மலையாள இயக்குநர் ஒருவர் கண்ணில்பட்டு நடிகையாக மாறினார்.

சித்திரம் பேசுதடி: பாவனா மலையாளத்தில் அறிமுகமான முதல் படமான 'நம்மல்' மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால், அடுத்தடுத்த படவாய்ப்புகள் அவரைத் தேடி சென்றன. அந்த நேரத்தில் தான் இயக்குநர் மிஸ்கின் சித்திரம் பேசுதடி படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார். அதன் பின் தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்தார். ஜெயம் ரவியுடன் பாவனா இணைந்து நடித்த தீபாவளி திரைப்படம் பாவனாவுக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது.

மன வலி: இந்த நேரத்தில் தான் அவர் ஒரு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் எதிரொலித்து மலையாள பிரபலங்கள் அனைவரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த துயரமான சம்பவத்தில் இருந்து மீண்டு வரமுடியாத பாவனா பலவிதமான மன வலியை அனுபவித்து வந்தார்.

கன்னட சினிமாவில்: பட வாய்ப்புகள் தேடி வந்த போதும் படத்தில் நடிக்கும் மனவலிமை அவரிடம் இல்லாததால், படவாய்ப்பை மறுத்து வந்தார். அந்த நேரத்தில் அவருக்கு துணையாக இருந்தது கன்னட சினிமாதான். குறிப்பாக ஷிவராஜ் குமார், பாவனாவை அழைத்து பேசி தைரியம் கொடுத்து கன்னட சினிமாவில் நடிக்கவைத்தார். கன்னடத்தில் இவர் நடித்த அனைத்துப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

13 வருடத்திற்கு பிறகு: தற்போது அசல் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 13 வருடம் கழித்து தமிழில் 'தி டேர்' என்ற த்ரில்லிங் கதையில் நடித்து வருகிறார். இந்த படத்தை பாவனாவின் சொந்த அண்ணன் ஜெயதேவ் இயக்கி வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்று வருகிறது. பல வலிகளை மறந்து பாவனா இந்த படத்தின் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்று பாவனா குறித்து பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X