Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
லாக்டவுனில் குண்டாகிட்டேன்...உடம்பை குறைக்கும் போட்டோ வெளியிட்ட பாவனா
திருவனந்தபுரம் : மலையாள நடிகையான பாவனா, நம்மள் படத்தின் மூலம் அறிமுகமானார். மலையாளத்தில் ஸ்வப்ணகூடு, சிஐடி மோசா, சிந்தாமணி கொலகேசு, ஹனிபீ, ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ் உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளார்.
டாக்டர் படத்தின் 3வது பாடல் So Baby இன்று ரிலீஸ்.. ரசிகர்கள் ஆர்வம்!
தமிழ், தெலுங்கு, கன்னடத்திலும் பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக மலையாளத்தில் அடம் ஜோயன் நடத்தில் நடித்தார். அதன் பிறகு 2018 ல் தெலுங்கு தயாரிப்பாளரான நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

குண்டான பாவனா
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வந்தார். அடிக்கடி தன்னை பற்றிய போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தான் குண்டாக இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

ஜிம்மிற்கு திரும்பிட்டேன்
ஜிம் போவதை வழக்கமாக கொண்டிருந்த பாவனா, லாக்டவுன் கட்டுப்பாடுகளால் ஜிம் போவதில்லை என கூறி இருந்தார். லாக்டவுன் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு, தற்போது ஜிம்மில் பயிற்சியை தொடர்ந்து வருகிறார்.

எடையை குறைக்கிறேன்
இந்நிலையில் தான் ஜிம்மில் இருக்கும் போட்டோவை 2 நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அத்துடன், திரும்பி பார்க்க வேண்டாம். நீங்கள் அங்கு போக போவதில்லை. ஜிம்மிற்கு திரும்பி உள்ளேன். லாக்டவுனில் போட்ட எடையை குறைக்க என குறிப்பிட்டிருந்தார்.

கன்னடத்தில் மவுசு
சில வருட இடைவெளிக்கு பிறகு பாவனா மீண்டும் நடிக்க வந்துள்ளார். தற்போது கன்னட படங்களில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார். கன்னடத்தில் அவருக்கு அதிக வாய்ப்புக்கள் வந்து கொண்டிருக்கிறது.