Don't Miss!
- News
"ஆபரேஷன் 111".. எடப்பாடி இறக்கிய மெகா டீம்.. நடப்பது நடக்கட்டும்.. பறந்து போன ஆர்டர்.. ஆஹா செம மோதல்
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
எப்படி நடந்தது அந்த மேஜிக்..? காதல் தொடங்கி 9 வருடங்கள்.. கணவருக்கு நன்றி சொல்லும் பிரபல நடிகை!
சென்னை: நடிகை பாவனா, தான் காதலில் விழுந்து 9 வருடம் ஆனதை ஒட்டி வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர், பாவனா. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார்.
கன்னடத்தில் இவர் நடித்த ரோமியோ என்ற படத்தை தயாரித்தவர் நவீன். அப்போது நட்பாக பழகிய நவீனும் பாவனாவும் பின்னர் காதலில் விழுந்தனர்.
ஸ்ட்ராப்லெஸ்
கவுனில்
செம
ஹாட்டாய்
இருக்கும்
பிக்பாஸ்
பிரபலம்..
ஜொள்ளு
விடும்
ரசிகாஸ்!

திருமணத்துக்குப் பிறகு
பின்னர் இரு வீட்டு சம்மதத்துடன் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த பாவனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வெளியான '96' படத்தின், கன்னட ரீமேக்கில் நடித்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து சிவராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் பஜராங்கி 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

காதலர் தினம்
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, காதலர் தினத்தை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை போஸ்ட் செய்திருந்தார், பாவனா. அதில், கடந்த 2011 ஆம் ஆண்டு, நான் முதன் முதலில் உங்களைச் சந்தித்தபோது, 'எனக்கான அவர்' நீங்கள்தான் என்பது தெரியாது. தயாரிப்பாளர்- நடிகர் என்ற உறவில் இருந்து தொடர்ந்து நட்பானோம். சிறந்த உறவுகள் நட்பில் இருந்தே தொடங்குகின்றன.

ஒன்பது வருடங்கள்
பின்னர் காதலில் விழுந்து 9 வருடங்கள் ஆகிவிட்டன' என்று கூறியிருந்தார். இந்தப் பதிவு அப்போது வைரலானது. இந்நிலையில் காதலிக்கத் தொடங்கி ஒன்பது வருடங்கள் ஆனதை ஒட்டி, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கணவர் நவீனுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ள அவர், அதில் கூறியிருப்பது.

காதலில் விழுந்தோம்
''ரோமியா' படம் வெளியாகி 8 வருடங்கள் ஆகிவிட்டன. எங்கள் காதல் தொடங்கி 9 வருடங்களாகி விட்டன. இந்தப் படம் எனக்கு உங்களை கொடுத்தது. எப்படி சந்தித்து காதலில் விழுந்தோம் என்பதும் உங்களுடன் வாழ்க்கையை தொடர நான் முடிவு செய்ததும் மேஜிக்காக இருக்கிறது. என் வாழ்க்கையில் நீங்கள் வந்ததற்கும் உங்களை காதலிக்க வைத்ததற்கும் நன்றி' என்று கூறியுள்ளார். இதற்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.