நீச்சல் உடையில் தெறிக்கவிடும் பூமிகா!
சென்னை : நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் கண்ணை நம்பாதே திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகை பூமிகா.
இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்து கலக்கிக் கொண்டிருக்கும் இவர் "இதி மா கதா" என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக வித்தியாசமான ரோலில் நடித்து வருகிறார்.
எப்பொழுதும் குடும்ப குத்துவிளக்காக சினிமாவில் தோன்றும் பூமிகா தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

கனவு கன்னியாக
பத்ரி, ரோஜாகூட்டம் என தமிழில் நடித்த இரண்டே திரைப்படங்களில் எக்கச்சக்க ரசிகர்களை பெற்ற பூமிகா தெலுங்கு மற்றும் இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் நடித்த பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று தெலுங்கு சினிமாவின் கனவு கன்னியாக இருந்தவர்.

குணச்சித்திர வேடங்களில்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2006 ஆம் ஆண்டு தமிழில் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த பூமிகா இதில் மிகவும் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்து இன்றளவும் அனைவரது மனதிலும் இடம் பிடித்துள்ளார். தமிழில் அவ்வப்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தெலுங்கில் முழு மூச்சாக நடித்து வந்த பூமிகா திருமணத்திற்கு பிறகு தற்போது அம்மா,அக்கா உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களில் நடிக்க அதற்கும் ரசிகர்களிடம் பெரும் ஆதரவு இருந்து வருகிறது.
Recommended Video

முதல்முறையாக
உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் பூமிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் கதாநாயகியாக நடித்துள்ளார். அந்த படத்திற்கு "இதி மா கதா" என டைட்டில் வைக்கப்பட்டிருக்க இதில் பைக் ரேஸராக முதல்முறையாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசரை பார்த்த அஜித் குமார் பாராட்டி இருந்தது பரபரப்பாக பேசப்பட்டது.

நீச்சல்குளத்தில் மல்லாக்க படுத்து
அன்று முதல் இன்று வரை நடிக்கும் அனைத்து படங்களிலும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் வந்து செல்லும் இவர் தற்பொழுது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அனைவரையும் அதிர வைத்துள்ளார். வெறும் டூ பீஸில் நீச்சல்குளத்தில் மல்லாக்க படுத்து அமைதியாக குளியல் போட்டவாறு இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள பூமிகாவின் இந்த நீச்சல் உடை புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது


Click it and Unblock the Notifications











