பூமிகாவுக்கு இன்றோடு 42 வயசாச்சு.. இணையத்தில் தெறிக்கும் வாழ்த்து செய்தி!

மும்பை : ரோஜா கூட்டம், பத்ரி, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட தமிழ் ரசிகர்களின் பல ஃபேவரிட் திரைப்படங்களில் நடித்திருந்தவர் நடிகை பூமிகா.

Recommended Video

எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்காக மாஸ் பிரார்த்தனை.. எஸ்.ஏ. சந்திரசேகர் உருக்கமான வீடியோ!

புதுமுக நடிகர், முன்னணி நடிகர் என எந்தவித பாகுபாடும் பார்க்காமல் தன்னுடைய கதாபாத்திரத்தை மட்டும் பார்த்து நடித்து புகழ் பெற்றவர்.

தமிழில் பல திரைப்படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் நடிகை பூமிகா ஆகஸ்ட் 21 ஆம் தேதியான இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடிய வருவதையொட்டி இவரது நண்பர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நீங்கா இடம் பிடித்து

நீங்கா இடம் பிடித்து

நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த கில்லி மற்றும் குஷி போன்ற திரைப்படங்களின் தெலுங்கு ரீமேக்கான குஷி மற்றும் ஒக்கடு உள்ளிட்ட பல்வேறு சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடத்தும், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து தமிழில் இன்றுவரை பெயர் சொல்லும் பல திரைப்படங்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார் நடிகை பூமிகா.

ஐஷு கதாபாத்திரம்

ஐஷு கதாபாத்திரம்

பார்க்க மிகவும் லட்சணமாக, அனைவரும் விரும்பும் அழகுடன் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வந்த நடிகை பூமிகா, தெலுங்கில் "யுவகுடு" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிதை தொடர்ந்து, தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படத்தில் அனைவரும் விரும்பும் சமத்து ப்ரண்டாகவும், காதலியாகவும் நடித்து தமிழ் ரசிகர்களை கவந்தார். அதைத் தொடர்ந்து ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் என தமிழில் பல வெற்றிப் படங்களில் நடிக்க சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் ஐஷு என்கிற ஐஸ்வர்யா கதாபாத்திரம் இளசுகளை பெரிதும் கவர்ந்த நிலையில் இன்றளவும் ரசிகர்கள் ஐஷுவை கொண்டாடி வருகின்றனர்.

சேது ஹிந்தி ரீமேக்

சேது ஹிந்தி ரீமேக்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் பாக்ஸ் ஆபீஸை கலக்கிய ஒக்கடு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்த பூமிகா ஹிந்தியில் சல்மான்கானுடன் "தேரே நாம்" என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகி மிகப் பிரபலமாக வலம் வந்தார். மேலும் "தேரே நாம்" திரைப்படம் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான "சேது" திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் திரில்லர்

சூப்பர் திரில்லர்

இவ்வாறு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரவுண்ட் கட்டி நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த பூமிகா தொடர்ந்து கதாநாயகியாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களும் இன்று வரை தொடர்ந்து நடித்த வரும் நிலையில் தற்பொழுது தமிழில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் "கண்ணை நம்பாதே" என்ற சூப்பர் திரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

42வது பிறந்தநாள்

42வது பிறந்தநாள்

பூமிகா ஏற்று நடித்து வரும் திரைப்படங்களின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பிரபலமாக பேசப்பட்டு வரும் நிலையில் ஆகஸ்ட் 21 ஆம் தேதியான இன்று பூமிகா தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது நண்பர்கள் திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X