»   »  திருமணமான ஓராண்டில் நடிகை தூக்கு போட்டு தற்கொலை

திருமணமான ஓராண்டில் நடிகை தூக்கு போட்டு தற்கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

குருகிராம்: ஜக்கா ஜசூஸ் பாலிவுட் படத்தில் நடித்த நடிகை பிதிஷா குருகிராமில் உள்ள அவரது வீட்டில் பிணமாகக் கிடந்தது தெரிய வந்துள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிதிஷா பெஸ்பருவா(30). டிவி பிரபலமான அவர் மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்துள்ளார். பாடகியும் கூட. ரன்பிர் கபூர், கத்ரீனா கைஃப் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஜக்கா ஜசூஸ் படத்தில் நடித்திருந்தார் பிதிஷா.

பிதிஷா குஜராத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அப்பா

அப்பா

திங்கட்கிழமை பிதிஷாவின் தந்தை அவருக்கு போன் செய்தபோது அவர் எடுக்கவில்லை. மும்பையில் கணவருடன் வசித்து வந்த பிதிஷா அண்மையில் தான் குருகிராமுக்கு மாறியுள்ளார்.

போலீஸ்

போலீஸ்

பிதிஷா போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவரின் தந்தை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் பிதிஷாவின் வீட்டிற்கு சென்றபோது கதவு உள்புறமாக பூட்டியிருந்தது.

மரணம்

மரணம்

போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது பிதிஷா மின்விசிறியில் தூக்கில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்யும் முன்பு கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை.

பிரச்சனை

பிரச்சனை

பிதிஷாவுக்கும் கணவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. கணவரின் பெற்றோர் தன்னை கொடுமைப்படுத்துவதாக பிதிஷா கூறி வந்துள்ளார். கணவரை விவாகரத்து செய்ய விரும்பிய நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

English summary
Assamese actress and singer Bidisha Bezbaruah, who acted in Ranbir Kapoor-starrer Jagga Jasoos, was found dead at her residence in the posh Sushant Lok area of Gurugram on Monday evening, police said.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil