நிர்வாணமாக நடித்தால் என்ன தப்பு.. அப்படி நடிக்கவும் ரெடி..பிந்து மாதவியின் அதிரடி முடிவு!

சென்னை : நடிகை பிந்து மாதவி, படத்திற்காக நிர்வாணமாக நடித்தால் என்ன தப்பு என்று அதிரடியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

வெப்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ள பிந்து மாதவிக்கு அங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

நடிகை பிந்து மாதவி

நடிகை பிந்து மாதவி

ஒரு ஓர ஓர பார்வை.. சரி என்னை எப்போ சேர்வ.. உன்னாலே என் தூக்கம் போயிருச்சே என தேசிங்கு ராஜா படத்தில் வரும் பாடலின் மூலம் ரசிகர்களின் இதயத்தை வளைத்துப்போட்டவர் நடிகை பிந்து மாதவி. சில்க் ஸ்மிதா போல வசீகரமான கண்ணழகை கொண்ட பிந்து மாதவிக்கு தேசிங்கு ராஜா படம் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அடுத்தடுத்த படங்களில்

அடுத்தடுத்த படங்களில்

கேடிபில்லா கில்லாடி ரங்கா படத்தில் பாய்ந்து பாய்ந்து சண்டை போட்ட பிந்து மாதவி, தேசிங்கு ராஜா படத்தில் ஓவராக கவர்ச்சி காட்டி இருந்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்நது, வருத்தப்படாத வாலிபர் சங்கர், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், தமிழுக்கு ஒன்றை அழுத்தவும், சவாலே சமாளி, ஜாக்சன் துரை, பக்கா, பசங்க, கழுகு 2 திரைப்படத்தில் நடித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில்

தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் பிஸியாக நடித்த பிந்து மாதவிக்கு படவாய்ப்பு குறைந்ததை அடுத்து, கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த பிந்து நான்காவது இடத்தை பிடித்தார். இதையடுத்து, நாகார்ஜூன் தொகுத்து வழங்கி தெலுங்கு பிக் பாஸ் சீசன் 6ன் டைட்டில் வின்னர் ஆனார்.

முக்கியமான ரோலில்

முக்கியமான ரோலில்

தற்போது பிந்து மாதவி யாருக்கும் அஞ்சேல், மாயன், பகைவனுக்கு அருள்வாய் ஆகிய படங்களில் கைவசம் கைத்துக்கொண்டு பிஸியாக உள்ளார். தற்போது ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பிந்து மாதவி, நயன்தாரா,த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் போல கதாநாயகிகளுக்கு முக்கியத்தும் கொடுக்கும் படங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன். தற்போது பெரும்பாலான படங்கள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக இருக்கின்றன. இது ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையாக நான் பார்க்கிறேன்.

நிர்வாணமாக நடித்தால் என்ன தப்பு..

நிர்வாணமாக நடித்தால் என்ன தப்பு..

இதைத்தொடர்ந்து, ஹீரோயின்கள் நிர்வாணமாக நடிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிந்து, நடிகைகள் பட வாய்ப்புக்காக நிர்வாணமாக நடிப்பதில்லை, படத்தின் கதைக்கு தேவை என்பதால் அப்படி நடிக்கிறார்கள் அதில் ஒன்றும் தவறுஇல்லை, ஒரு நடிகையின் வேலை அதுவாக தான் நான் இருக்க முடியும், அதுபோன்ற கதாபாத்திரம் வந்தால் நானும் நிச்சயம் அவ்வாறு நடிப்பேன் என்று நடிகை பிந்து மாதவி பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X