For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பகிரங்க ஆதரவு.. திரௌபதி டி ஷர்ட்டில் கெத்தாய் போஸ் கொடுத்த பிரபல நடிகை.. தீயாய் பரவும் போட்டோ!

  |

  சென்னை: திரௌபதி டி ஷர்ட் அணிந்து பிரபல பிக்பாஸ் நடிகை ஒய்யாரமாய் போஸ் கொடுத்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

  BJP Gayathri blind support to Draupathi | Pa. Ranjith Tweet

  திரௌபதி படம்தான் தற்போது டாக் ஆஃப் தி டவுனாக உள்ளது. பெரும் சர்ச்சைகளுக்கு பிறகு இன்று திரௌபதி படம் உலகம் முழுக்க ரிலீஸ் ஆகியிருக்கிறது.

  தமிழகத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ளது. திரௌபதி படம் சாதிய ரீதியிலான முக்கிய பிரச்சனைகளை எடுத்து கூறுவதால் படத்தின் ட்ரெயிலர் வெளியானது முதலே எதிர்பார்ப்பும் அதிகமாகி விட்டது.

  ஒரு சமூகமே நாடக காதல் பண்றாங்கனு சொல்றது நியாயமாவா இருக்கு.. கொந்தளிக்கும் வலை தளவாசிகள்!ஒரு சமூகமே நாடக காதல் பண்றாங்கனு சொல்றது நியாயமாவா இருக்கு.. கொந்தளிக்கும் வலை தளவாசிகள்!

  நல்ல புரமோஷன்

  நல்ல புரமோஷன்

  இந்நிலையில் பாஜகவின் தேசிய செயலாளரான எச் ராஜா, பாமக நிறுவனரான டாக்டர் ராமதாஸ் ஆகியோர் படத்தை பார்த்ததும் படம் குறித்து பாஸிட்டிவான கமென்ட்டுகளை கூறியதும் படத்திற்கு வேற லெவல் புரமோஷனாக உள்ளது. சமூக வலைதளங்களிலும் படத்திற்கு நல்ல புரமோஷன் இருந்து வருகிறது.

  நடிகை டி ஷர்ட்

  நடிகை டி ஷர்ட்

  இந்நிலையில் பாஜக பிரமுகரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியவருமான நடிகை காயத்ரி ரகுராம் படத்திற்கு விளம்பரம் அளிக்கும் வகையில் ஒரு காரியத்தை செய்திருக்கிறார். அதாவது திரௌபதி என பிரின்ட் செய்யப்பட்ட டி ஷர்ட்டை அணிந்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.

  கெத்தாய் போஸ்

  கறுப்பு நிற டி ஷர்ட்டில் நடிகர் ரிச்சர்ட் சிலம்பம் சுற்றும் திரௌபதி படத்தின் போஸ்டரும் படத்தின் பெயரான திரௌபதியும் அந்த டி ஷர்ட்டில் இடம் பெற்றிருக்கிறது. அந்த டிஷர்ட்டை அணிந்துள்ள காயத்ரி ரகுராம், கறுப்பு நிற கூலிங் கிளாஸ், கறுப்பு நிற ஷு என ஃபிரி ஹேரில் கெத்தாய் போஸ் கொடுத்திருக்கிறார்.

  ரிச்சர்ட்டுக்கு பாராட்டு

  காயத்ரி ரகுராமின் இந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் திரௌபதி படத்திற்கு ஆதரவான கருத்துக்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை காயத்ரி ரகுராம். திரௌபதி படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரிச்சர்ட் ரிஷிக்கு வாழ்த்து கூறியுள்ள காயத்ரி, அவரது நடிப்பை பாராட்டியிருக்கிறார். பெண்களை மையப்படுத்திய படத்தை தேர்வு செய்ததற்கு நன்றி என்றும் இன்று சமூக விழிப்புணர்வு மிகவும் தேவை என்றும் பதிவிட்டுள்ளார்.

  ரஞ்சித் டிவிட்

  ஏற்கனவே டெல்லி போராட்டம் குறித்து இயக்குநர் பா ரஞ்சித், தேசத்தின் தலைநகரில் வகுப்புவாத பாசிச சக்திகள் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதைப் பார்ப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடு. ஆளும் பாஜக அரசாங்கம் இந்த நாட்டை அடிப்படைவாதத்திற்கு திட்டமிட்டு திருப்பி வருகிறது, அதேபோல் தமிழ்நாட்டிலும் முயற்சி செய்கிறது. பாசிசத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம்! என டிவிட்டியிருந்தார்.

  கை கூலிகள்

  இயக்குநர் ரஞ்சித்தின் இந்த டிவிட்டுக்கு, பதிலடி கொடுத்த காயத்ரி ரகுராம், மதச்சார்பின்மை என்றால் என்ன? மதச்சார்பின்மை இந்துக்களுக்கு மட்டுமே பொருந்துமா? ஊழல் முறையை பாஜக சரிசெய்கிறது. ஏனெனில் உங்களை போன்ற பெரியாரிஸ்ட் கூலி மாமாக்கள் தமிழகத்தில் இந்து மதத்தை அழித்து வருகின்றனர். இந்தியாவில் இந்துக்களை அழிக்கும் காங்கிரஸ் பாக்கிஸ்தான் கை கூலிகள். முஸ்லிம்களைத் தூண்டுவது நீங்கள் தான் என காட்டமாக பதிலளித்திருந்தார்.

  பகிரங்க ஆதரவு

  பகிரங்க ஆதரவு

  இந்நிலையில் திரௌபதி படத்தின் டி ஷர்ட்டை அணிந்து அந்த படத்திற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார். அதோடு படம் தொடர்பான வீடியோக்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் காயத்ரி ரகுராம். காயத்ரி ரகுராம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை விமர்சித்ததால் எழுந்த பிரச்சனையால் அவரது டிவிட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Actress BJP personality Gayathri raguram wears Draupathi T Shirt. Gayathri raguram shows her support to Draupathi movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X