Marimuthu - டிக்கெட் கன்ஃபார்ம் ஆகிடுச்சு.. மாரிமுத்து இறந்துபோனார்.. எதிர்நீச்சல் அப்பத்தா சொல்வதை பாருங்க

சென்னை: Ethirneechal Marimuthu (எதிர்நீச்சல் மாரிமுத்து) மாரிமுத்து இறப்பு குறித்து எதிர்நீச்சல் நாடகத்தில் அப்பத்தா கேரக்டரில் நடிக்கும் பாம்பே ஞானம் பேசியிருக்கிறார்.

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து திரைப்படங்களின் மூலம் எந்த அளவு புகழடைந்தாரோ அதைவிட கொஞ்சம் கூடுதலாக எதிர்நீச்சல் சீரியலின் மூலம் பிரபலமடைந்தார். தொண்டையை செருமுவது, டயலாக் டெலிவிரி, உடல் மொழி, எதார்த்தமான நடிப்பு என அதகளம் செய்தார். இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் மூலம் சென்று சேர்ந்தார்.

Actress Bombay Gnanam Talks about Ethirneechal Marimuthu Death

உயிரிழப்பு: சூழல் இப்படி இருக்க எதிர்நீச்சல் நாடகத்துக்காக கடந்த 8ஆம் தேதி வளசரவாக்கத்தில் டப்பிங் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது உடலில் அசௌகரியம் ஏற்பட உடனடியாக தானே காரை எடுத்துக்கொண்டு சூர்யா மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆனார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது உடல் அவரின் சொந்த ஊரான பசுமலைதேரியில் தகனம் செய்யப்பட்டது.

ஜோசியம் காரணமா?: மாரிமுத்து உயிரிழந்த அடுத்த நாளே அவர் உயிரிழப்புக்கு ஜோசியத்திற்கு எதிராக பேசியதுதான் காரணம் என ஒரு சிலர் கூறினார்கள்.அதற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து அப்படி பார்த்தால் பெரியார் ஏன் 90 வயதுக்கும் மேல் வாழ வேண்டும் என கேள்வி கேட்டனர். அதுமட்டுமின்றி இப்படியும் சிலர் பேசுவதை பார்த்தால் அவர்களுக்கு மனசாட்சி இருக்கிறதா இல்லையா என்ற கேள்வியும் எழுவதாக தெரிவித்தனர்.

அப்பத்தா பேட்டி: இந்நிலையில் எதிர்நீச்சல் நாடகத்தில் மாரிமுத்துவுக்கு அப்பத்தாவாக நடித்த நடிகை பாம்பே ஞானம் இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசினார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "நமக்கு வாய்ப்பு வரும்போது அதை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதில் மாரிமுத்து ஈடுபட்டிருந்தார். பத்து நிமிடங்களுக்கு முன்னர் வந்திருந்தால்கூட காப்பாற்றியிருக்கலாம் என மருத்துவர் சொன்னார். ஆனால் மாரிமுத்துவோ தானாகே கார் ட்ரைவ் செய்து போகணும் என்று நினைத்திருக்கிறார். அவ்வளவுதான் விதி. விதிதான் தனது மதியை வைத்து கதையை முடித்திருக்கிறது.

Actress Bombay Gnanam Talks about Ethirneechal Marimuthu Death

அதெல்லாம் இல்லை: ஜோதிடத்தை எதிர்த்ததால் அவர் இறந்துவிட்டார் என்று சொல்ல முடியாது. அப்படி பார்த்தால் ஜோதிடத்தை எதிர்ப்பவர்கள் ஏராளமானோர் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் உயிரிழப்பு ஏற்பட்டிருக்க வேண்டுமேன். அதனால் அதையெல்லாம் நாம் சொல்ல முடியாது சொல்லவும் கூடாஅது. அவரது விதி அவ்வளவுதான். டிக்கெட் கன்ஃபார்ம் ஆச்சு. அதனால் இறந்துட்டார்""என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X