பைனான்சியரிடம் காரை வாங்கிக் கண்டு அவரைத் தாக்கவில்லை- புவனேஸ்வரி

சென்னை தியாகராய நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் (40). பைனாசியர். இவருக்கு சொந்தமான ரூ. 9 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை மாதம் ரூ. 40 ஆயிரம் வாடகைக்கு எடுத்துள்ளார் புவனேஸ்வரி. முதல் மாதம் மட்டும் வாடகை கொடுத்து விட்டு அதன் பிறகு 10 மாதங்களாக வாடகை பணம் தராமல் காரை திருப்பி ஒப்படைக்காமல் ஏமாற்றி வருவதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்துள்ளார் அசோக்குமார்.
காரை திருப்பி தருமாறு கேட்டதற்கு அடியாட்களை அனுப்பி மிரட்டுவதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார். இந்த புகார் மனு தியாகராய நகர் போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் அசோக்குமார் புவனேஸ்வரி மீது புதிய புகாரை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
நேற்று இரவு வீட்டு முன்பு நான் நின்று கொண்டிருந்த போது சிலர் கும்பலாக வந்து என்னை தாக்கினர். புவனேஸ்வரி மீது கமிஷனர் அலுவலகத்தில் நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்திருந்தேன். அதன் பிறகு எனக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தது.
புவனேஸ்வரி அனுப்பிய ஆட்கள்தான் என்னை தாக்கியிருக்கலாம் என்று நினைக்கிறேன். இதுபற்றி இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரனிடம் போனில் தெரிவித்தேன். உடனடியாக போலீசார் வந்து விசாரித்தனர். என்னை தாக்கியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தன் மீதான புகாரை புவனேஸ்வரி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அந்தத் தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்பில்லை. அதில் எனக்கு துளியும் சம்பந்தமில்லை.என் மீதான புகார் பொய்யானது என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











