இட்லி, தோசை வாங்கிச் சாப்பிட்ட புவனேஸ்வரி... தான் தான் ஏமாந்து போனதாக போலீஸில் வாக்குமூலம்!

By Sudha

Actress Buvaneswari
சென்னை: தான் யாரையும் மோசடி செய்யவில்லை என்றும் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கி தன்னைத்தான் மோசடி செய்து விட்டார்கள் என்றும் போலீஸில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளாராம் நடிகை புவனேஸ்வரி. போலீஸில் காவலில் உள்ள அவர் இட்லி, தோசை வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் போலீஸார் ஹோட்டலில் வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்தார்களாம்.

டிரைவ் இன் ஹோட்டலில் செய்த தகராறு உள்ளிட்ட 3 வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார் புவனேஸ்வரி. தியேட்டர் கலாட்டா வழக்கு தவிர, குருநாதன் என்பவரிடம் டிவி சீரியல் தயாரிப்பதாக கூறி ரூ. ஒன்றரை கோடி மோசடி செய்து விட்டதாக வழக்குப் போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 2 நாள் காவலில் புவனேஸ்வரியை போலீஸார் எடுத்துள்ளனர்.

அவரை மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் வைத்து பெண் போலீஸார் உதவியுடன் துருவித் துருவி விசாரணை நடத்தினராம் போலீஸார். அப்போது போலீஸாரிடம் புவனேஸ்வரி பரபரப்பு வாக்குமூலம் அளித்தாராம்.

இதுகுறித்து புவனேஸ்வரி கூறுகையில், சினிமாவில் உள் அலங்கார பணிகளை செய்து வரும் குருநாதனுடன் சினிமா துறையில் இருப்பவர் என்ற முறையில் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. அவர் சினிமா படம் டி.வி. சீரியல் எடுப்பதற்காக நிதி உதவியும் செய்து வருகிறார். டி.வி. சீரியல் தயாரிக்கப்போவதாக கூறி குருநாதனிடம் நான் பணம் வாங்கியது உண்மைதான்.

அவர் கூறுவது போல ரூபாய் ஒன்றரை கோடியெல்லாம் வாங்கவில்லை. 10 லட்சம் ரூபாய் மட்டுமே வாங்கினேன் இதற்காக வெற்று பேப்பர்களில் கையெழுத்து வாங்கினார்கள். இதை வைத்து என்னை ஏமாற்றிவிட்டார்கள். அப்பாவித்தனமாக நானும் ஏமாந்து விட்டேன் என்று கூறினாராம் புவனேஸ்வரி.

இட்லி, தோசை மீது விருப்பம்

விசாரணையின்போது புவனேஸ்வரிக்குப் பிடித்த சாப்பாட்டை போலீஸார் வாங்கிக் கொடுத்தனராம். இரவும், காலையும் தனக்கு இட்லி, தோசை வேண்டும் என்று புவனேஸ்வரி வேண்டுகோள் வைக்கவே, அதற்கேற்ப போலீஸாரும் இட்லி, தோசை வாங்கிக் கொடுத்தனராம்.

எழும்பூரில் கமிஷனர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள கென்னத் லேனில் உள்ள ஹோட்டலில் போய் இட்லி, தோசை வாங்கி வந்தனராம். அதை வாங்கிச் சாப்பிட்டாராம் புவனேஸ்வரி.

போலீஸ் காவல் இன்றுடன் முடிவதால் இன்று மாலை மீண்டும் கோர்ட்டில் புவனேஸ்வரியை போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X