Just In
- 2 min ago
நீச்சல் குளத்தில் மொத்த முதுகையும் காட்டி.. மிரள விடும் பிக் பாஸ் ஷெரின்.. குவியுது லைக்ஸ்!
- 25 min ago
நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி
- 34 min ago
சேலையில் பின்னழகை காட்டி சுண்டி இழுக்கும் தமிழ் நடிகை!
- 50 min ago
2 வருடத்துக்குப் பிறகு ஷூட்டிங்.. இயக்குனர், உதவி இயக்குனர் திடீர் மோதல்.. பிரபல ஹீரோ அப்செட்!
Don't Miss!
- News
இதான் சீமான்.. "பன்றிதான் கூட்டமாக வரும்.. ஆனால் சிங்கம்".. சொன்னதை செய்து.. லிஸ்ட் அறிவித்து.. செம!
- Sports
ஓரமாக உட்கார்ந்து இருந்தேன்.. உங்கள் டீமை விட்டு போனதே சந்தோசம்.. ஐபிஎல் அணியை வெளுத்த இளம் வீரர்
- Automobiles
ஸ்ட்ரீட் 750 பைக்குகளின் விற்பனை நிறுத்தம்!! விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக் இனி இதுதான்...
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 23.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்னைப்பத்தி என்ன நினைச்சுட்டிருக்கீங்க.. அவரைப் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்களிடம் சீறிய நடிகை!
சென்னை: நடிகர் ஒருவர் குறித்த கேள்விக்கு நடிகை கேத்ரீன் தெரசா கோபப்பட்ட சம்பவம் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை கேத்ரின் தெரேசா ஷங்கர் ஐபிஎஸ் என்ற கன்னட படத்தின் மூலம் நடிப்புக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்து மலையாள படங்களில் வாய்ப்புக் கிடைத்ததால் தொடர்ந்து 2 படங்களில் நடித்தார்.
இதனை தொடர்ந்து அவருக்கு தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக மெட்ராஸ் படத்தில் நடித்தார்.
ஓவரா பில்டப் கொடுத்தாங்களே... அர்ஜுன்ரெட்டி மேஜிக் ஒர்க் அவுட் ஆகலை.. சுருண்டு விழுந்த பேமஸ் லவ்வர்

அடுத்தடுத்து வாய்ப்பு
இதில் வட சென்னை பெண்ணாக அவரது அபார நடிப்பு பாராட்டை பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தன. கதக்களி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, வந்தா ராஜாவாதான் வருவேன், நீயா 2, அருவம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பாலகிருஷ்ணாவுக்கு ஜோடி
விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. தொடர்ந்து தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியாக உள்ளார் கேத்ரீன் தெரேசா. இவர் தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான என்.டி. பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கேத்ரின் நடிப்பதாக தகவல் வெளியானது.

நடிக்க மறுப்பு - தகவல்
பல முன்னணி நடிகைகள் மறுத்தப் போதும் கேத்ரீன் தெரேசா பாலகிருஷ்ணாவுடன் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. இதற்காக அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அப்படத்தில் கேத்ரின் தெரேசா நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்து கேத்ரீன் தெரேசா தரப்பில் இருந்தோ அல்லது தயாரிப்பாளர் தரப்பில் இருந்தோ எந்த தகவலும் இல்லை.

செம கோபம்
இந்நிலையில் கேத்ரின் தெரசா தனது புதிய பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரிடமே அதற்கான பதிலை பெற விரும்பிய நிருபர்கள் என்.டி.பாலகிருஷ்ணா படத்தில் நடிக்கிறீர்களா என்றனர். இதனைக் கேட்டு கடும் கோபமடைந்த கேத்ரீன் தெரேசா என்னைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என கேட்டு சீறினார்.

திரைத்துறையில் பரபரப்பு
நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல நான் ஆள் இல்லை.
அதுபற்றி சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் அல்லது தயாரிப்பாளர் ரவீந்தர் ரெட்டி அல்லது இயக்குனரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். இதுதொடர்பாக எந்த பதிலும் நான் சொல்ல மாட்டேன் என ஏற்கெனவே தெளிவாக கூறியிருக்கிறேன் என்று கூறிவிட்டு வேகமாக புறப்பட்டுவிட்டார். நடிகை கேத்ரீன் தெரசா திடீரென இப்படி கோபப்பட்ட சம்பவம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.