விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட பிரபல சின்னத்திரை நடிகை.. தலைமறைவான காதலன் அதிரடி கைது!
பெங்களூரு: சின்னத்திரை நடிகை தற்கொலை செய்துகொண்ட வழக்கில், தலைமறைவாக இருந்த அவர் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
பெங்களூரை சேர்ந்த சின்னத்திரை நடிகை சந்தனா (29). குவார்ட்டர் லைப் என்ற படத்திலும் நடித்துள்ளார். இது இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
இவர் கடந்த மாதம் 28 ஆம் தேதி, தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விஷம் குடிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்தார் சந்தனா.

தலைமறைவு
தனது தற்கொலைக்கு காதலன் தினேஷ்தான் காரணம் என்று அந்த வீடியோவில் கூறி இருந்தார். இதுகுறித்து பெங்களூர் சுத்தகுண்டே பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தனா தற்கொலை செய்து கொண்டது தெரிந்ததும் தினேஷ் குடும்பத்துடன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

எலக்ட்ரானிக் சிட்டி
இந்நிலையில், சிக்கமகளூரு மாவட்டத்தில் தினேஷ் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர். தினேசின் சொந்த ஊர் ஹாசன் மாவட்டம். அவர் குடும்பத்துடன் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் வசித்து வந்தார். தினேஷூம், தற்கொலை செய்துகொண்ட சந்தனாவும் ஐந்து வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர்.

முழுமையாக நம்பினார்
முதலில் நட்பாக பழகியவர்கள் பிறகு தீவிரமாக காதலிக்கத் தொடங்கினர். சந்தனாவை, திருமணம் செய்வதாகக் கூறியதை அடுத்து சந்தனா அவரை முழுமையாக நம்பினார். இதனால் அவர் கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்து வந்துள்ளார். டிவி சீரியல்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்து சேர்த்து வைத்திருந்த பணத்தில் ரூ 5 லட்சம் வரை கொடுத்துள்ளார்.

மனம் உடைந்தார்
இந்நிலையில் மே மாதம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி நடிகை சந்தனா கேட்டுள்ளார். அதற்கு தினேஷ் மறுத்துவிட்டாராம். சந்தனாவிடம் வாங்கிய ரூ.5 லட்சத்தையும் திருப்பிக் கொடுக்காததால் சந்தனா மனம் உடைந்தார். இதையடுத்து தற்கொலை முடிவுக்கு வந்துள்ளார் எனபது தெரியவந்துள்ளது. கைதான தினேஷிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











