அநீதிக்கு எதிராக சீறிய சாந்தினி ரசிகர்கள் பாராட்டு

Recommended Video

கோலி சோடா சாந்தினிக்கு பாராட்டுக்கள் வந்து குவிகின்றன | Jiiva | Riya Suman | D.imman | Rathna Siva

சென்னை: நேற்று வெளியான சீறு படத்திற்கு நல்ல வரவேற்பும் மற்றும் நல்ல விமர்சனமும் கிடைத்துள்ளது.

இப்படத்தில் நடித்த சாந்தினிக்கு பல பாராட்டுக்கள் வந்து குவிகின்றன.
கோலி சோடா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சாந்தினி.
கோலி சோடா படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சாந்தினி. இது அவருக்கு முதல் படம், அதிலே நன்றாக நடித்து பல முன்னணி இயக்குனர்களின் வாழ்த்தை பெற்ற இவர் இரண்டாவதாக நடித்த திரைப்படம் தான் சீறு.

Actress chandini get well recognition by fans

படத்தில் பலரும் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தை சாந்தினி ஏற்று நடித்து இருந்தார். படத்தை பாதி இவர் தான் தாங்கி உள்ளார். பள்ளி மாணவியாக வந்த அனைவரும் இவரை ரசிக்கும் படி செய்துள்ளார். பெண்களின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமானது, இந்த நாட்டில் அவர்களை நாம் எப்படி நடத்த வேண்டும் என்று உணர்த்தி உள்ள படம் சீறு.

Actress chandini get well recognition by fans

தனது முந்தைய படத்தில் அக்கா மீது வைத்துள்ள பாசத்தை பற்றி பேசிய இயக்குனர் ரத்ன சிவா, இப்படத்தில் தங்கை பாசத்தை பற்றி பேசியுள்ளார். அந்த பாசத்தை காட்டும் காட்சிகள் அனைத்தும் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது என்று பலரும் கூறியுள்ளனர்.

பாப்பா பாப்பா என்று தன் தங்கையை ஜீவா பேசும் காட்சிகள், அனைத்தும் அண்ணன் தங்கை பாசம் என்றால் இவர்களது பாசம் தான் என்று நம்மை நினைக்க வைக்கின்றன. இவர்கள் போல தான் அண்ணன் தங்கை இருக்க வேண்டும் என்று எடுத்துக் காட்டாகவும், இருவரும் படத்தில் நடித்து இருக்கின்றனர்.

Actress chandini get well recognition by fans

பிளஸ் 2வில் மாநிலத்தில் முதல் இடம் பெற்று தொலைக்காட்சியில், பேட்டி கொடுக்கும் போது பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை பற்றி கூறி ஆடியன்ஸ் இடம் இருந்து பல கைதட்டல்களை பெற்று அவர்களை ரசிக்க வைத்துள்ளார் சாந்தினி.

வேல்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் அவர்கள் இந்த படம் பற்றி பேசும் போது மிகவும் பெருமையான தருணம் என்று பல மேடைகளில் சொல்லி வருகிறார்.

Actress chandini get well recognition by fans

இது போன்ற ஒரு கதையை தேர்வு செய்து அதில் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்களை நடிக்க வைத்து, படம் பார்க்க வரும் நம்மை யோசிக்க வைத்து, பெண்களுக்கு இது போன்று நடக்கிறது என்று ஒரு நல்ல கருத்துடன் படத்தை இயக்கி உள்ளார் ரத்ன சிவா. அவருக்கு பல தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X