அமீரின் அரசியல் 'நாற்காலி'யில் இவர்தான் ஹீரோயின்!

By

சென்னை: அமீர் ஹீரோவாக நடிக்கும் நாற்காலி படத்தில் அவர் ஜோடியாக சாந்தினி நடிக்கிறார்.

சூர்யா, த்ரிஷா நடித்த, மெளனம் பேசியதே படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அமீர். இதையடுத்து ஜீவா நடித்த ராம், கார்த்தி அறிமுகமான பருத்தி வீரன், ஜெயம் ரவி நடித்த அதி பகவன் உட்பட படங்களை இயக்கினார்.

பின்னர் சுப்ரமணிய சிவா இயக்கிய, யோகி படத்தில் ஹீரோவாக நடித்தார். அடுத்து, சில படங்களில் நடித்த அமீர், கடைசியாக வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

actress Chandini to pair opposite director Ameer in Narkali

நாற்காலி

இதையடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு நாற்காலி என டைட்டில் வைக்கப் பட்டுள்ளது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில் அரசியல்வாதி வேடத்தில் அமீர் தோன்றியுள்ளார்.

வி.இஸட்.துரை

இந்தப் படத்தை வி.இஸட்.துரை இயக்குகிறார். இவர், அஜித் நடித்த முகவரி, விக்ரம் நடித்த காதல் சடுகுடு, ஷாம் நடித்த 6 மெழுகு வர்த்திகள், சுந்தர்.சி நடித்த இருட்டு உட்பட சில படங்களை இயக்கியவர்.

actress Chandini to pair opposite director Ameer in Narkali

அஜயன் பாலா

இதற்கு கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். அஜயன் பாலா வசனம் எழுதுகிறார். இந்தப் படத்தை, மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிக்கிறார். இதில் அமீர் ஜோடியாக சாந்தினி நடிக்கிறார்.

இவர் வில் அம்பு, நையப்புடை, ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி, வணங்காமுடி உட்பட பல படங்களில் நடித்தவர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X