Exclusive: இமேஜ் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை... 'இருட்டு அறை' நாயகி சந்ரிகா ஓப்பன் டாக்!

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சந்ரிகா ரவி, 'உன் காதல் இருந்தால்' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார்.

Recommended Video

இருட்டு அறை நாயகி சந்ரிகா ஓப்பன் டாக்!- வீடியோ

சென்னை: இமேஜ் பற்றி தான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை என நடிகை சந்ரிகா ரவி தெரிவித்துள்ளார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழில் பேயாக அறிமுகமானவர் நடிகை சந்ரிகா ரவி. அடிப்படையில் இந்தியரான சந்ரிகா, பிறந்து வளர்ந்தது எல்லாம் ஆஸ்திரேலியாவில். தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செட்டிலாகிவிட்டார்.

அங்கு மாடலிங் செய்து வரும் சந்ரிகா ரவி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள 'உன் காதல் இருந்தால்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதற்காக சென்னை வந்திருந்தவரை ஒன்இந்தியாவுக்காக சந்தித்தேன். அவருடன் உரையாடியதில் இருந்து.

சென்னை என் தாய்வீடு

சென்னை என் தாய்வீடு

" அடிப்படையில் நான் ஒரு இந்திய பெண். அப்பா கேரளா, அம்மா தமிழ். இதனால் சென்னை எனக்கு தாய் வீடு மாதிரி. தற்சமயம் தான் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கிறேன். பட வேலைகளுக்காக மட்டுமே இங்கு வந்து போகிறேன். ஆனால் அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஏனென்றால் நான் சென்னை மிகவும் நேசிக்கிறேன்.

ஹீரோயின் புரோமோஷன்

ஹீரோயின் புரோமோஷன்

உன் காதல் இருந்தால் படம் மூலம் நான் ஹீரோயினாக புரோமோஷன் பெற்றுள்ளேன். அதற்காக இயக்குனர் ஹாசிம் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஸ்ரீகாந்துடன் நடித்தது ஒரு நல்ல அனுபவம்.

வித்தியாசமான கதாபாத்திரம்

வித்தியாசமான கதாபாத்திரம்

இது ஒரு சைக்காலஜிகல் திரில்லர் படம். எனது கதாபாத்திரம் மிக வித்தியாசமாக இருக்கும். ரியாஸ் கான், லீமா போன்றோருடன் சேர்ந்து வேலை செய்தது மறக்க முடியாத ஒன்று.

நிறைய வாய்ப்புகள்

நிறைய வாய்ப்புகள்

நான் ஹீரோயினாக நடித்துள்ள தெலுங்கு படம் ஒன்றும் விரைவில் வெளியாக உள்ளது. இதன் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நிறைய வாய்ப்புகள் வருகின்றன. தொடர்ந்து படங்களில் நடிக்கவே விரும்புகிறேன்.

இமேஜ் பாதிக்கவில்லை

இமேஜ் பாதிக்கவில்லை

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்ததால், எனது இமேஜ் பாதிக்கப்படும் என நான் ஒருநாளும் இணைத்ததில்லை. ஏனென்றால் இது வெறும் நடிப்பு தான் என்பது எனக்கு தெரியும். ஒரு டாக்டர் தனது பணி முடிந்த பிறகு கோட்டை கழற்றி வைப்பது போல் தான், நானும் ஒரு படத்தில் நடித்த பிறகு, அந்த வேஷத்தை கலைத்து விடுவேன்.

கிளாமர் ரோல்

கிளாமர் ரோல்

தற்போது கிளாமர் ரோல்கள் தான் அதிகம் வருகின்றன. எனக்கு கிளாமர் நன்றாகவே ஒர்க்கவுட் ஆகும் என்பதால், அதுபோன்ற பாத்திரங்களை ஏற்று நடிக்கிறேன். நல்ல பெர்பாமன்ஸ் செய்யக்கூடிய வேடங்கள் வந்தாலும் நடிப்பேன் ", என சந்ரிகா ரவி கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X