அமெரிக்காவில் இருந்து அப்படி இப்படி போட்டோ.. 'மாடர்ன் சில்க்'கிடம் அந்த கேள்வியைக் கேட்ட ரசிகர்!

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல நடிகை அமெரிக்காவில் இருந்து வெளியிட்டுள்ள போட்டோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த இந்திய வம்சாவளி நடிகை, சந்திரிக்கா ரவி. பிரபல மாடல்.

இவர் இப்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார்.

சந்திரிகா ரவி

சந்திரிகா ரவி

தமிழில், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். கவுதம் கார்த்திக் நடிப்பில் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இது. வைபவி ஷாண்டில்யா, சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் இணைந்து இந்தப் படத்தில் நடித்திருந்தனர். முக்கியமான பேய் கேரக்டரில் நடித்திருந்தார் சந்திரிகா ரவி.

உன் காதல் இருந்தால்

உன் காதல் இருந்தால்

அடுத்து நகுல் நடித்த செய் என்ற படத்தில் நான்சி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இப்போது, உன் காதல் இருந்தால் என்ற படத்தில் ஶ்ரீகாந்த் ஜோடியாக நடித்து வருகிறார். ஹாசிம் மரைக்காயர் இயக்கும் இந்தப் படத்தின் மலையாள நடிகர் மக்பூல் சல்மான் தமிழில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை.

மாடர்ன் சில்க் ஸ்மிதா

மாடர்ன் சில்க் ஸ்மிதா

நடிகை சந்திரிகா ரவி, அசப்பில் கிளாமர் குயின் சில்க் ஸ்மிதாவை ஞாபகப்படுத்துவது போல இருப்பதால், தமிழ் ரசிகர்கள் மாடர்ன் சில்க் என்கின்றனர் இவரை. தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் அவர், அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது அரைகுறை புகைப்படங்களை பதிவு செய்வது ரசிகர்களை அப்படி இப்படி கிறங்கடிப்பது வழக்கம்.

தலைவி இல்லைனா

தலைவி இல்லைனா

அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். கமென்ட்களையும் அள்ளித் தெளித்துள்ளனர். ஒருவர், தலைவி இல்லைனா நான் இல்லை என்று சொல்லி இருக்கிறார். இன்னொருவர், உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? என்று அப்படியொரு வார்த்தையைக் கேட்டிருக்கிறார். மற்றொரு ரசிகர், உங்க நீண்ட கூந்தல் ரொம்ப அழகா இருக்கு என்று தெரிவித்துள்ளார்.

உடலை எப்படி?

உடலை எப்படி?

ஒரு நெட்டிசன், இங்க மழை பெய்ஞ்சுகிட்டு இருக்கு.. நீங்க வேற ஹாட் போட்டோ போடறீங்களே? என்று வருத்தப்பட்டிருக்கிறார். இன்னொருவர் எப்படி உங்க உடலை கரெக்டா மெயின்டெயின் பண்ணிட்டு வர்றீங்க? என்று ஆச்சரியமாகக் கேட்டிருக்கிறார். இன்னும் பலர் அவரது அழகை, அப்படி இப்படி வர்ணித்துள்ளனர். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X