4வது முறையாக பேரை மாற்றிக் கொண்ட ‘காதல் திருமணம்’ சர்ச்சை நடிகை.. இப்போ என்ன பேர் தெரியுமா?
நடிகை அதிதி மேனன் தனது பெயரை நான்காவது முறையாக மாற்றியுள்ளார்.
Recommended Video
சென்னை: காதல், திருமணம் என சர்ச்சைகளில் சிக்கிய நடிகை அதிதி மேனன் தனது பெயரை நான்காவது முறையாக மாற்றியுள்ளார்.
சினிமாவில் அறிமுகமாகும் நட்சத்திரங்கள் தங்களுடைய உண்மையான பெயரை மாற்றி, வேறு பெயரை வைத்துக்கொள்வது வழக்கமான ஒன்று தான். நடிகர் ரஜினிகாந்த் தொடங்கி இதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் உள்ளன.
ஒருகட்டத்தில் நல்ல புகழ்பெற்ற பிறகு, சினிமா பெயரையே தங்களுடைய சொந்த பெயராக அவர்கள் மாற்றிக்கொள்வர். இந்த பெயர் மாற்றங்களுக்கு நியூமராலஜி, ஜோதிடம் போன்றவையும் ஒரு காரணமாக இருக்கும்.

பிரச்சினை தான் காரணம்
ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு நடிகை நான்காவது முறையாக தனது பெயரை மாற்றியுள்ளார். இவருடைய ஒவ்வொரு பெயர் மாற்றத்துக்கு பின்புறம் ஒரு பிரச்சினை தான் காரணமாக இருக்கிறது. அந்த நடிகையின் பிரபலமான பெயர் அதிதி மேனன்.

மலையாளத்தில் சாய்னா சந்தோஷ்
அதிதி மேனனின் சொந்த ஊர் கேரளா. இடுக்கி மாவட்டத்தில் பிறந்த அவருடைய இயற்பெயர் சாய்னா சந்தோஷ். அந்த பெயரில் தான் மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கினார். சீரியல் வில்லியாக அறிமுகமான அவருக்கு அங்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டன. இதையடுத்து அவர் வெள்ளித்திரைக்கு தாவினார்.

ஆதிரா சந்தோஷ்
முதன் முதலில் அவர் நடித்த படம் நெடுநல்வாடை. இந்த படத்தில் ஆதிரா சந்தோஷ் என்ற பெயரில் அவர் நடிக்க ஒப்பந்தமானார். படத்தின் இயக்குனருக்கும் அவருக்கும் பிரச்சினை ஏற்படவே, அதில் இருந்து விலகினார். அவருக்கு பதில் அஞ்சலி நாயர் என்பவர் நெடுநல்வாடை படத்தின் ஹீரோயினா நடித்து நல்ல பெயர் வாங்கினார்.

அதிதி மேனனாக மாறினார்
பிறகு அதிதி மேனன் என்ற பெயரில் பட்டதாரி படத்தில் அபி சரவணனுடன் நடித்தார். இந்த படம் அவருக்கு ஓரளவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இதையடுத்து களவாணி மாப்பிள்ளை எனும் படத்தில் தினேஷுக்கு ஜோடியாக அதிதி நடித்தார்.

அபி சரவணன் பிரச்சினை
இந்நிலையில் அதிதி மேனன் தன்னை காதலித்து, திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக புகார் கூறி பரபரப்பை கிளப்பினார் அபி சரவணன். ஆனால் அபியை தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என மறுத்தார் அதிதி. இதுதொடர்பான வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த மாதம் 27ம் தேதி இந்த வழக்கு விசாரணையில் ஆஜராக அதிதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போதைய பெயர்
இதற்கிடையே மீண்டும் மலையாள படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார் அதிதி மேனன். இம்முறை மிர்னா மேனன் என தனது பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார். இந்த பெயரில் தான் மோகன் லாலுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் அவர். இந்த பெயராவது தனக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தருமா எனும் எதிர்பார்ப்பில் இருக்கிறார் மிர்னா மேனனாக மாறியுள்ள அதிதி மேனன்.


Click it and Unblock the Notifications











