'நீங்க வேணா பாருங்க.. டாப் 3 நடிகைகள் லிஸ்டில் அவரும் கண்டிப்பா இருப்பார்..' பிரபல நடிகை கணிப்பு!
சென்னை: இந்தியாவின் டாப் 3 நடிகைகளில் ஒருவராக அந்த நடிகையும் இருப்பார் என்று கணித்துள்ளார், பிரபல நடிகை சார்மி.
பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே. இந்தியில் ஸ்டூடன்ட் ஆப் த இயர் 2, 'பதி பத்னி அவுர் வோ' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து நடித்து வரும் அவர், இப்போது புரி ஜெகநாத் இயக்கும் படம் மூலம், தெலுங்கு மற்றும் தமிழுக்கும் வர இருக்கிறார்.

தயாரிக்கிறார்
இந்தப் படத்தை புரி ஜெகநாத்துடன் இணைந்து நடிகை சார்மியும் தயாரிக்கிறார். இதில், பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கிறார். படத்துக்கு ஃபைட்டர் என்று தற்காலிகமாக டைட்டில் வைத்துள்ளனர். இது ஒர்க்கிங் டைட்டில். பின்னர் வேறு டைட்டில் வைக்கப்படும். இந்தியில் கரண் ஜோஹர், ஆபூர்வா மேத்தா தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது. முதல் ஷெட்யூல் அங்கு முடிந்துவிட்டது.

விஜய் தேவரகொண்டா
படத்தின் ஷூட்டிங்கின் போது அனன்யா பாண்டேவும், விஜய் தேவரகொண்டாவும் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்பட்டது. இதில், முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தவர், ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் அவர் அறிமுகமாக இருந்ததாக செய்திகள் வெளியாயின. பின்னர் சில பிரச்னைகள் காரணமாக படத்தில் இருந்து விலகியதாகக் கூறப்பட்டது.

பான் இந்தியா
இந்தப் படம், இந்தி, தெலுங்கு, தமிழ் உட்பட சில மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது. இந்நிலையில் இந்தப் படத்துக்குப் பிறகு நடிகை அனன்யா பாண்டே, இந்தியாவில் டாப் நடிகைகள் பட்டியலில், ஒருவராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார் நடிகை சார்மி. 'இந்தப் படத்தின் ரிலீஸுக்குப் பின், அவர் வேற லெவலுக்குச் செல்வது உறுதி.
Recommended Video

தனித்துவம்
அவர் சிறந்த தொழில்முறை நடிகை. அழகானவர். செட்டில் அவர் நடந்துகொள்ளும் விதம் தனித்துவமாக இருக்கிறது. அதனால்தான் சொல்கிறேன், இந்தியாவின் டாப் 3 நடிகைகளில் ஒருவராக இருப்பார்' என்று தெரிவித்துள்ளார். சார்மி, தமிழில், சிம்புவின் 'காதல் அழிவதில்லை' படத்தில் ஹீரோயினாக நடித்தவர் சார்மி. தொடர்ந்து ஆஹா அப்படித்தான், பிரபுசாலமன் இயக்கிய லாடம் உட்பட சில படங்களில் நடித்தார்.


Click it and Unblock the Notifications











