த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம்.. பிரபல நடிகை வெளியிட்ட ரகசியம்!
சென்னை: நடிகை த்ரிஷாவின் திருமணம் குறித்து பிரபல நடிகை சுவாரசிய தகவலை வெளியிட்டுள்ளார்.
1999ஆம் ஆண்டு பிரசாந்த் - சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை த்ரிஷா.
தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா, விக்ரம், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்துள்ளார் த்ரிஷா.

பிறந்தநாள்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தின் முலம் ரஜினிகாந்துக்கும் ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை த்ரிஷா, கடந்த 4ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பேச்சுலராக கடைசி பிறந்தநாள்
அந்த வகையில் நடிகை த்ரிஷாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவரான சார்மியும் அவருக்கு பிறந்த நாள் தெரிவித்திருந்தார். தனது வாழ்த்துடன் திரிஷா பேச்சுலராக கொண்டாடும் கடைசி பிறந்தநாள் இதுவாகத்தான் இருக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.

கணவருடன் கொண்டாடுவாரா?
இதனைப் பார்த்த ரசிகர்கள் அடுத்த பிறந்த நாளுக்குள் த்ரிஷாவுக்கு திருமணம் ஆகிவிடுமா என கேட்டு வருகின்றனர். மேலும் அடுத்த பிறந்த நாளை த்ரிஷா தனது கணவருடன் கொண்டாடுவாரா என்றும் கேட்டு வருகின்றனர்.

தயாரிப்பாளருடன் நிச்சயம்
நடிகை த்ரிஷா, பிரபல தெலுங்கு நடிகரான ராணா டகுபதியை காதலித்து வந்தார். சில ஆண்டுகள் நீடித்த அவர்களின் காதல் கருத்து வேறுபாடுகளால் முறிந்தது. அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் வருண் சுப்பிரமணியத்துடன் த்ரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது.

விரைவில் திருமணம்
ஆனால் சில காரணங்களால் அந்த திருமணம் நின்று போனது. இந்நிலையில் நடிகை த்ரிஷா பேச்சுலராக கொண்டாடும் கடைசி பிறந்தநாள் இதுதான் என அவரது தோழியான நடிகை சார்மி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications










