Bad Girl: படுக்கை அறை காட்சி எதற்கு.. பேட் கேர்ள் படம் சொல்வது என்ன.. ஷர்மிளா பேட்டி!
சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ள திரைப்படம் 'பேட் கேர்ள்'. இப்படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பரத் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அஞ்சலி சிவராமன் சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண் ஆகியோர் நடித்துள்ளனர் .பாலிவுட்டின் முக்கிய இயக்குநர் அனுராக் காஷ்யப் இந்த படத்தை வெளியிட உள்ளார். இப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14ந் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கும் நிலையில், இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த டீசரில் வரும் படுக்கை அறை காட்சி பலரை முகம் சுளிக்க வைத்து இருக்கும் நிலையில், இந்த படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் அர்ஜூன் சம்பத் உட்பட பலர் கருத்துக்களை கூறிவருகின்றனர்.

இதுகுறித்து, யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய நடிகை ஷர்மிளா, படத்தின் இயக்குனரே படத்திற்கு ஒரு புதுமைப் பெண், வாழ்க்கையில் சாதித்த பெண், வெற்றிகரமான பெண் என்று மோட்டிவேஷனலாக எந்த ஒரு தலைப்பையும் தராமல் படத்திற்கு பேட் கேர்ள் என்று தான் தலைப்பு கொடுத்து இருக்கிறார்கள். இரண்டரை மணி நேர திரைப்படத்தில் இருந்து, 2 நிமிடம் டிசர் வெளியாகி இருக்கிறது. இந்த டீசரை வைத்து படம் எப்படி இருக்கும், அப்படி இருக்கும் என்று கருத்து சொல்லி விட முடியாது. வெற்றிமாறன் போன்ற ஒரு மிகப்பெரிய இயக்குனர், ஒரு டீசரில் படத்தின் மொத்த விஷயத்தையும் வெளியிட வாய்ப்பு இல்லை. இதுக்கு பின்னால், ஏதோ ஒரு முக்கியமான விஷயம் இருக்கு என்று தான் நான் நினைக்கிறேன்.
படத்தின் வெற்றி தான்: பேர்ட் கேர்ள் திரைப்படத்தின் டீசர் ஆரம்பிக்கும் போது, அந்த பெண் எனக்கு ஆண் நண்பர் வேண்டும் என கேட்பது போல காட்சி வருகிறது. இது படத்தினுடைய முதல் காட்சி இல்லை, அது ட்ரெய்லரின் முதல் காட்சி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். படத்தின் அத்தனை முக்கியமான காட்சிகளையும் அழகாக எடிட்டி செய்து டிரைலரில் வைத்து இருக்கிறார்கள். இதுதான் படகுழுவின் புத்தி, ஏனென்றால் இந்த ட்ரெய்லரை பார்த்து விட்டு, இந்த படத்தில் வேறு ஏதோ இருக்கிறது என்று இணையத்தில் பேச வைத்து இருக்கிறார்கள். இதுவே படத்தின் வெற்றிதான்.
பெற்றோருக்கு ஒரு பாடம்: பெற்றோர்கள் தன் பெண்ணை கட்டுப்பாடுடன் வளர்க்கிறேன் என்பதற்காக, இந்த உடையை போடாதே, ஆண்களுடன் பேசாதே, ஃபோனை யூஸ் பண்ணதே, டிவி பார்க்காதே என எப்போதும் பெண்களை கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள். இதனால், குழந்தைகளுக்கு இதை எல்லாம் செய்தால் என்ன என்கிற எண்ணம் வருகிறது. இதனால்தான் பெண்கள் இந்த மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பது தான் பேட் கேர்ள் படத்தின் கதையாக இருக்கலாம், இந்த படம் பெற்றோருக்கு ஒரு பாடமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
அதே போல அந்த டிரைலரில் படுக்கை அறையில் அந்த பெண் ஒரு ஆணுடன் இருப்பது, சரக்கு அடிப்பது போல காட்சிகள் வருகிறது. அந்த பெண் அப்படி வாழ நினைக்கிறாளா இல்லை,. அந்த பெண், இதுபோன்ற பிரச்சனையில் சிக்கி மீண்டு வருகிறாளா என்பதை முழுபடத்தை பார்த்தால் தானே தெரியும். டிரைலரை வைத்து படம் இது தான் என்பதை சொல்லிவிட முடியாது என்று நடிகை ஷர்மிளா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











