புருஷன் வீட்ல இல்லனு யாரு சொன்னா.. அவ்வளவுதான் உனக்கு மரியாதை.. சுசித்ராவை வறுத்தெடுத்த நடிகை!
சென்னை: சர்ச்சைக்குரிய பாடகியான சுசித்ரா, நடிகர் விஷால், கார்த்தி குமார் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து, இரவு ஒயின் பாட்டிலுடன் கதவை தட்டினார் என்று கூறியிருந்தார். இது இணையத்தில், பேசு பொருளான நிலையில், இதுகுறித்து பேட்டி அளித்துள்ள நடிகை சார்மிளா, சுசித்ராவிற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், பாடகி சுசித்ரா சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியலை, விஷால் பிசியான நடிகர், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என எப்பொழுதுமே பிசியாக இருந்து கொண்டு இருப்பார். அப்படி, பிசியாக இருக்கும் விஷால், சுசித்ராவின் வீட்டுக்கு சரக்கு பாட்டிலுடன் சென்றார் என்று சொல்வதையெல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. விஷால் அழைத்தால் வீட்டிற்கோ, அலுவலகத்திற்கோ, வெளியில் செல்வதற்கு என பல நடிகைகள் இருக்கும்போது அவர் ஏன் சுசித்ராவை தேடி செல்ல வேண்டும்.

தனியா இருக்கிறேன்: அது மட்டும் இல்லாமல் சுசித்ராவின் கணவர் வீட்டில் இல்லை என்று விஷாலுக்கு எப்படி தெரியும், சுசித்ரா போனில் நான் தனியாக இருக்கிறேன், என் புருஷன் வீட்டில் இல்லை என்று சொன்னாரா? அப்படி சொல்லி இருந்தால் தான், விஷால் பாட்டிலுடன் வீட்டிற்கு சென்றிருப்பார். ஆனால், சுசித்ரா அந்த வீடியோவில் அப்படி சொல்லவே இல்லை, திடீரென்று வந்தார் என்று தான் விஷால் மீது பழிபோட்டு இருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் நண்பர்கள் வீட்டிற்கு சென்று சரக்கு அடிப்பது, பார்ட்டி பண்ணுவது எல்லாம் சாதாரணமாகிவிட்ட நிலையில், விஷால், தவறான நோக்கத்துடன் வீட்டுக்கு வந்தார் என்று சொல்வது எல்லாம் நம்பும்படியாகவே இல்லை.
ஏன் சாபம்விடுகிறார்: விஷால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில், அவருக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்யாதீர்கள் என்று சாபம் விடுகிறார். சாபம் விடும் அளவிற்கு விஷால், என்ன செய்துவிட்டார். விஷாலை மட்டுமில்ல, ஜோதிகா சூர்யா, விஜய், திரிஷா என அனைவருக்கும் அவர் சாபம் விடுகிறார். 20 ஆண்டுகாலமாக விஜய், திரிஷா நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். அதை ஒரு நல்ல விஷயமாக சொல்லலாமே, அதே போல முதல் படத்திலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டு, இத்தனை வருடங்களாக நல்ல தம்பதிகளாக சூர்யா, ஜோதிகா வாழ்ந்து வருகிறார்கள், அவர்கள் குறித்த நல்ல விஷயங்களைப் பற்றி பேசலாமே. ஆனால், சுசித்ராவிற்கு எல்லா விஷயங்களையும் நெகட்டிவாக பேசி பழக்கமாகிவிட்டது.
இதற்கு மேல் நல்லது இல்லை: சுசித்ராவிற்க இப்போது எந்த வேலையும் இல்லை, என்பதால், மற்றவர்களுக்கு சாபம் விடுகிறார். இது அவருக்கு நல்லதும் இல்லை. சுசித்ரா இது போன்று வீடியோ போடும் போது, யாரும் இது குறித்து பேசாமல் இருப்பதால்தான் அவர் தொடர்ந்து இதுபோன்று மோசமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். சுசித்ரா, விஷால் குறித்து பேசியதால் தான் இதற்கு நான் பதிலளிக்க முன் வந்தேன். இதுவே வேறு யார் பற்றியாவது, அவர் பேசி இருந்தாலும், நான் கண்டுகொள்ளாமல் சென்று இருப்பேன். இதற்கு மேல சுசித்ரா அனைத்தையும் குறைத்துக் கொண்டு நல்லபடியாக இருந்தால் அவருக்கு தான் நல்லது என்று அந்த நடிகை கொந்தளித்து பேசி இருக்கிறார்


Click it and Unblock the Notifications











